Header Ads



கொரோனாவிடம் இருந்து தப்ப, முகத்தை மறைக்கும் முகக்கவசம் அணிந்த முதல் அரசியல்வாதி



இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் சமூக மட்டத்தில் பரவ ஆரம்பித்தமையினால் தேர்தல் நடத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சில அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது, சுகாதார அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது பிரச்சார கூட்டங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரச்சார நடவடிக்கையில் முகக் கவசத்திற்கு பதிலாக மேலும் ஒரு விசேட கவசத்தை அணிந்திருந்தார்.

முழுமையாக முகத்தை மூடிய வகையில் அணிய கூடிய இந்த உபகரணம் தற்போது முக்கிய வர்த்தக நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு முகத்தை மறைக்கும் முகக் கவசம் அணிந்த முதல் சந்தர்ப்பம் இது என கூறப்படுகின்றது.

எனினும் பல வைத்தியசாலைகள், காவல்துறையினர் இந்த முககவசத்தை சாதாரண பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.