Header Ads



அனைத்துவித துஷ்பிரயோகங்களில் இருந்தும், சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் - பாதுகாப்பு செயலாளர்


அனைத்து விதமான துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து நேற்று (27)  பாதுகாப்பு அமைச்சில்  ஏற்பாடு செய்த விஷேட கூட்டத்திலேயே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு,  பாடசாலை மட்டத்தில் விஷேட விழிப்புணர்வு குழுக்ககள் ஏற்னவே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துரதிஷ்டவசமாக, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எடுக்க வேண்டிய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளில் சிலர், அவற்றில் மறைமுகமாக  ஈடுபட்டிருந்தமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.  இவ்வாறு செயற்பட்ட பொலிஸ் போதை தடுப்பு பிரிவின்   அதிகாரிகள் 17 பேர் இதுவரை   கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், சிறுவர்களுக்கு எதிரான  குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகளை கடுமையானதானதாக மாற்றியமைக்கும் வகையில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தற்போது அமுலில் உள்ள சட்டங்கள் மிகவும் மென்மையானதாக காணப்படுவதால்  குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு நியாயமான தண்டனைகள் வழங்க முடியாமல் உள்ளன என்றார்.

No comments

Powered by Blogger.