Header Ads



ஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு, இன்று பரிசீலனை


கொவிட்-19 நோயால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று (13) பிற்பகல் 1.30 மணியளவில் விசேடமாக எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இவ்வழக்கில், மனுதாரர் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் ஆஜராகின்றார்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, கடந்த மாதம் 08ஆம் திகதி உச்ச நீதிமன்றால் எடுக்கப்பட்டு, இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்லம் எஸ்.மௌலானா

No comments

Powered by Blogger.