Header Ads



திருகோணமலை யாருக்கு சொந்தமானது என்பதை, இம்முறை தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும்: சம்பந்தன்

திருகோணமலை யாருக்கு சொந்தமானது என்பதை இம்முறை தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும் என இரா சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள அவரது வீட்டில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு;

“திருகோணமலையில் மிக நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. நடைபெறவுள்ள ஒன்பதாவது தேர்தல் என்பது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.

போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த மாவட்டத்தில் ஒரு சிறந்த மக்கள் ஆணையை பெறுவதன் மூலமே நாங்கள் அரசியல் அதிகாரத்தை பேசுவதற்கும், அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் எங்களுடைய திருகோணமலை மாவட்டம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த மண்ணில் பாரம்பரியமாக நூற்றாண்டுக் கணக்காக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாக இருந்தால் சிறந்த ஆணையை திருகோணமலை மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அற்ப சொற்பமான வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அதை சீரழிக்க வேண்டாம்.

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றிய போது 13ஆம் சக்திக்கு அப்பாற் சென்று 13 பிளஸ் என்று சொல்லப்படுகிற தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு ஒருமித்த நாட்டுக்குள் அந்த அதிகாரத்தை பார்த்து நான் வழங்குவேன் என்று கூறியிருப்பது ஒரு மகத்தான வெற்றி. இதை அவர் இன்று மாத்திரம் கூறவில்லை. தொடர்ந்து கூறி வருகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிற முடிவுக்கு மஹிந்த ராஜபக்ஷ அவருடைய அரசாங்கமும் வந்திருக்கின்றது என்பதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.”

இதன்போது திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. தமிழ் தலைமைகள் நகர்த்துகின்ற ராஜதந்திரத்தை அறியாமல் ஹக்கீமும் றிசாத்தும் சஜித்தின் பின்னால் அள்ளுண்டு செல்வது சொந்த நலன் சார்ந்த டீல் காரணமாக என்பதை சமூகம் அறிந்து கொண்டு இம்முறை தக்க பாடம் புகட்டுவார்கள்.

    ReplyDelete
  2. However, something is better than anything or everything. But we must agree that Mr Sampanthar is genuinely working for his Tamil community whereas the Muslim community too is enjoying it's out coming smell.

    ReplyDelete

Powered by Blogger.