Header Ads



தேர்தலில் தோல்வியடையும் எவரும், தேசிய பட்டியலில் நியமிக்கப்பட மாட்டார்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடையும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த எந்த வேட்பாளருக்கும் மீண்டும் தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என அதன் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த 5 பேரை அதன் தலைவரும் அன்றைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் நியமித்தார்.

எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் இவ்வாறு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், விஜித் விஜயமுனி சொய்சாவை தவிர ஏனைய நான்கு பேரும் இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

விஜயமுனி சொய்சா, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டதுடன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

1 comment:

Powered by Blogger.