Header Ads



ரணிலும் அவரது சகாக்களும் ஒருபோதும் தப்பிக்க முடியாது - சுசில்


(இராஜதுரை ஹஷான்)

பிணைமுறி மோசடியில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரரது சகாக்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று -09- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

பிணைமுறி கொடுக்கல்  வாங்கல் விநியோக மோசடி  தொடர்பில் முன்னாள் பிரதமர்  ரணில்   விக்ரமசிங்க பொறுப்பற்ற விதத்தில் கருத்துரைக்கிறார். மோசடி தொடர்பில் பொறுப்பு கூறலில் இருந்து   இவருக்கும், மோசடி இடம் பெறவில்லை என்று குறிபபிட்டு புத்தகம் வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் விலக முடியாது.

பிணைமுறிகள் விநியோகத்தில் மோசடி இடம்பெற்றது என எதிர் தரப்பினர் குறிப்பிட்டபோது    அதனை  அப்போதைய ஆளும் தரப்பினர் எதிர்த்தார்கள். குற்றச்சாட்டு தொடர்பில்  ஆராய்வதற்கு    ரணில் விக்ரமசிங்க நீதியரசர்கள் மூவரை உள்ளடக்கிய பிடிபன  குழுவை  நியமித்தார். மோசடிகள் இடம்பெறவில்லை என்றே  அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அறிக்கையின் உள்ளடக்கங்களும் பொய்யாக்கப்ட்டன.

மோசடி தொடர்பில் ஆராய்ந்த முதலாவது கோப் குழுவின்  அறிக்கையை  பாராளுமன்றத்திற்கு   சமர்ப்பிக்காத வகையில் ரணில் விக்மசிங்க அரசியல் காய் நகர்த்தி  பாராளுமன்றத்தை கலைத்தார். இதன் காரணமாக  பல விடயங்கள்   வெளியாகவில்லை. தற்போது ஜனாதிபதி   விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக   பல விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே  கடந்த அரசாங்கத்தில்   அங்கம் வகித்தவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த்ததை   மாற்றியமைத்து புதிய திருத்தத்தை உருவாக்க வேண்டுமாயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.