July 14, 2020

முஸ்லிம் முதலாளிகளின் மீது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இனவாத குற்றச்சாட்டு

நமது இனத்தின் இருப்புக்காக நீண்ட போராட்டங்களை நடத்தி பல தியாகங்களை செய்த பின்பும், இன்று மாற்று சமூகங்களிடம் மண்டியிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் வானொலியின் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள் வேலையின்மை காரணமாக மிகுந்த வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் போராளிகளின் நிலைமை படுமோசமாக உள்ளது.

இதனால் இவர்கள் மாற்று சமூக முதலாளிகளிடம், குறிப்பாக மாற்று சமூக முதலாளிகளிடம் வேலை தேடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் முதலாளிகள், இவர்களை தமது நாட்கூலிகளாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், மதமாற்றம் செய்யும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. பல கவலைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

மாற்று சமூக முதலாளிகளால் வேலைக்கு அமர்த்தப்படும், தமிழ் இளம் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் ஆண்களின் மனைவிகளாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தமிழ் சமூகத்தில் அக்கறையுடையவர்கள், அம்பாறை மாவட்டத்தில் முதலீடுகளை செய்து தமிழ் இளைஞர்,யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த இழிநிலையை தவிர்க்கலாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 கருத்துரைகள்:

இந்தக் குற்றச்சாட்டு மிகவும பாரதூரமான எவ்வித அடிப்படையுமற்றதாகும். சாதாரணமாக தேர்தல் காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து தமிழ் அரசியல் "எடுபிடி"களால் பேசப்படும் ஒரு வக்கிரமான அலப்பறைகளாகும். இப்படியான சம்பவங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் கேள்விப்பட்டதும் இல்லை. பாதிக்கப்பட்டவரகள் யாரிடமும் முறைப்பாடுகள் செய்ததாகவும் ஆதாரங்கள் இல்லை. தயவுசெய்து தேர்தலுக்கு நிற்பவரகள் இனங்களுக்குள் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் போடுவதனைத் தவிர்க்கவும். தமிழ் மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ உங்கள் விருப்பததிற்கு ஏற்றவிதமாக சூடேறற முயற்சிக்க வேண்டாம். தற்போதைய மக்கள் விவரம் தெரிந்தவரகளாக இருக்கின்றனர். ஏதாவது குறைபாடுகள் எங்காவது நடைபெற்று இருந்தால் அந்தந்தப் பிரதேசத்தில் பெரியவரகள் இருக்கினறனர். சமூக மற்றும் கிராம அதிகாரிகள் மற்றும் அரச, மதம் சார்ந்த அதிகாரிகள் இருக்கினறனர் அவரகளிடம் முறையிட்டு பெறவல்ல சமூகநீதியினைப் பெற்றுக்கொள்ளப் பாருங்கள். உங்களது அரசியல் சித்து விளையாட்டுகளை தவறான முறையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்பதனை திருவாளர். தவராசா கரையரசனுக்குத் கவலையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

இதில் எந்தவிதமான இனவாதமும் இல்லை.100% உண்மையான கருத்து. தமிழ் சமூகம் முஸ்லிம்களிடமிருந்து இயலுமான அளவு விலகி இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும்

Post a comment