Header Ads



சஜித் பொறுமை காக்கவில்லை, ரணில் பொறுமையாக இருந்தார் - நவீன்


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையை ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் தீர்த்துக்கொள்ள முடியாது போனதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கூட்டணியின் தலைவர் உட்பட பல பதவிகளை வழங்கினார். இதனால், கட்சியை பிளவுப்படுத்துவதற்கான காரணங்கள் இருக்கவில்லை.

நீங்களே பிரதித் தலைவர், இதனால் அடுத்த தலைவராக நீங்களே தெரிவு செய்யப்படுவீர்கள் என நாங்கள் கூறினோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தனவை போல் சஜித் கட்சியில் இரண்டாவது அணியை உருவாக்கினார்.

சஜித்திற்கு பின்னர் தலைவர் பதவியை பெறுவது என்ற எண்ணத்தில் நானும் இருந்தேன். சஜித் பிரேமதாச பொறுமையாக இருந்திருக்கலாம். எனினும் அவர் பொறுமை காக்கவில்லை. இதன் காரணமாகவே பிரச்சினை ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களில் சஜித் பிரேமதாசவின் அணியினர் கட்சிக்குள் 5 முதல் 6 மணி நேரம் கட்சிக்குள் வாத விவாதங்களில் ஈடுபட்டனர். கோஷங்கள், திட்டுதல்கள் அதில் காணப்பட்டன. எனினும் ரணில் விக்ரமசிங்க பொறுமையாக இருந்தார் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.