Header Ads



முஸ்லிம் கடைகளை புறக்கணித்தால், சிங்களவர்களின் தொழில்களே இல்லாமல் போகின்றன - விஜயமுனி சொய்ஸா


(ரிஹ்மி)

"தற்போது மக்களை பயம் காட்டி வாக்குகளை சேகரிக்கும் நிலைக்கு ஆளும் தரப்பினர் தள்ளப்பட்டுள்ளனர். தமக்கு வாக்களிக்காவிட்டால் குப்பைகளை அள்ள மாட்டோம் என்று மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்" என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். 

நேற்றைய தினம் (27) முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் பவாஸ் அவர்களின் ஏற்பாட்டில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் வேட்பாளர் விஜயமுனிய சொய்ஸா அவர்கள் பல மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 நீங்கள் இந்த நாட்டில் இரண்டாம் மட்ட பிரஜைகள் அல்லர். உங்களுக்கு இந்த நாட்டில் சம உரிமை இருக்கிறது. உங்களது விருப்பப்படி உடுக்கவும், மார்க்க கடமைகளை பின்பற்றவும், கூட்டங்கள் நடாத்தவும், கருத்து தெரிவிக்கவும் நாட்டில் தலைவர்களை உருவாக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. 

இது இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசாகும். அதனை இல்லாமலாக்குவதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. கோட்டாபயவுக்கு அதிகாரமும் இல்லை. மூன்றிலிரண்டும் இல்லை. அதனை நாங்கள் தடுத்திக்கிறோம். நாம் 19 ஆம் திருத்தத்தினை உருவாக்கி விட்டே வெளியேறினோம். 

ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க, மஹிந்த ஆகியோருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் கோட்டாபயவுக்கு இல்லை. கோட்டாபயவுக்கு இந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் உரிமை கிடையாது. அதிகாரம் கிடையாது. அமையப் போகும் ஆட்சியில் பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு. 

சகல மத ரீதியிலான தீவிரவாதங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள் தான்.ஒரு சமுதாயத்தில் சிறு குழு செய்யும் நடவடிக்கைக்காக அனைவர் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீதான தாக்குதலை தொடர்ந்து மினுவாங்கொட பிரதேசத்தில் அரசியல்வாதிகள் பாதைகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். 

எமது புதிய அரசாங்கத்தில் உங்களை நாம் பாதுகாப்போம். நீங்கள் எம்மிடம் கேட்பதானால பள்ளிவாசல் கட்ட இடம் ஒன்றை கேட்பீர்கள். அல்லது சிங்கள மனிதரிடமிருந்து மாடு ஒன்றினை வாங்கி சமைப்பதற்காக அறுப்பதற்கு கேட்பீர்கள். முஸ்லிம்கள் அறுக்கும் ஆடு, கோழிகளை சிங்கள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  

நீங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்தவர்கள். உங்களது வியாபார நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள, பௌத்தர்கள் பணி புரிகின்றனர். ஆனால் எமது சில முட்டாள்தனமான சிந்தனையுள்ளவர்கள் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். நாம் அவ்வாறு புறக்கணிப்பின் சிங்களவர்களின் தொழில்களே இல்லாமல் போகின்றன. இவற்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 

நாங்கள் முஸ்லிம்களுக்கு ஏசி விட்டு பெண்களை சம்பாதிப்பதற்காக அரபு நாடுகளுக்கு அனுப்புகிறோம். அவ்வாறே யுத்தம் காலம் தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்புக்கள் இடம்பெறும் போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வந்திருக்கின்றன. யுத்தம் செய்வதற்கு பாகிஸ்தான், இலங்கைக்கு உதவியது. 

மன்னர்களுடைய காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இருந்து வரும் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிணைப்பை முறிப்பதற்கு எம்மால் இடமளிக்க முடியாது. ஆனால் வங்குரோத்து அரசியல்வாதிகள் இனவாதத்தினை தூண்டி வருகிறார்கள். ஆனால் புத்த தருமம் என்பது அதுவல்ல. அவற்றை அறிந்த சிறந்த பௌத்தர்கள் தூய்மையான முறையில் மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள். 

எமது நாட்டின் கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் மதிப்பு சேர்த்துள்ளார்கள். அவற்றை நன்கு அறிந்த ஒரு அரசியல்வாதிதான் இந்த விஜயமுனி சொய்ஸா. நான் கற்றது தல்துவை சீதாவாக்க பாடசாலையில். அங்கு பாரிஸ், யூசுப், கவுஸ் முதலாளி ஆகியோர் என்னுடன் கற்றவர்கள். அவர்களுடன் பாடசாலை காலத்தில் சண்டையும் பிடித்துள்ளோம். ஆனால் வீட்டில் சொல்லவில்லை. சொன்னால் எங்களுக்கு அடி விழும். அவ்வாறு இருந்தது எமது ஒற்றுமை. 

இதன் போது வேட்பாளரின் விஜயமுனி சொய்ஸாவின் பிரத்தியேக செயலாளரும், நீர்ப்பாசன சபையின் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் காதர், முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நாஸர், முன்னாள் கலேவெல பிரதேச சபை உறுப்பினர் நிஜாம்தீன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இப்போது யாராவது ஒருவர் "உங்கள் பார்வையில் தற்போது ஒரு கனவானின் பெயரைக் கூறுங்கள் என்று கேட்டால் நான் "விஜயமுனி சொய்சா" அவரகளைத்தான் கூறுவேன். ஏனெனில் அவருடைய பேச்சு ஒரு கனவானுக்குரிய பேச்சு; அதில் அவர் சகோதரத்துவத்தையும், அன்பையும், இன சௌஜன்னியத்தையும் சில வார்த்தைகளில் அழகிய பிம்பத்தைக் அதற்குக் கொடுத்துவிட்டுச் செல்கின்றார். உண்மையில் அடிப்படையில் முஸ்லிம்கள் யார்? அவரகள் சிங்கள பௌத்த தாய்மார்களின் அல்லது தமிழ்த் தாய்மார்களின் வயிற்றிலிருந்து பிறந்தவரகள். பௌத்த இந்து மக்களுக்கு இலங்கையில் இருக்கும் உறவினர்களை விட முஸ்லிம்களுக்கு மிக அதிகளவில் பருத்தித்துறையில் இருந்து தெவுந்தர முனை வரையும் மற்றும் கொழும்பில் இருந்து சஙகமான்கந்தை வரையிலும் உறவினர்கள் எல்லாச் சாதியிலும் சமூகத்திலும் இருக்கின்றனர். அதனால்த்தான் முஸ்லிம்கள் இந்நாட்டில் குறைந்த வீதத்தில் வாழ்ந்தாலும் இலஙகையில் அடர்ந்து காணப்படும் சிறு சிறு கிராமங்களிலும் வாழ்கின்றனர். அவரகளது பள்ளிவாசல்கள் இலங்கை முழுவதும் பரவிக் கிடக்கின்றன. முஸ்லிம்களுக்காக பேசக்கூடிய வாதிடக்கூடிய சிங்கள இந்து சகோதரர்கள் இலங்கை முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். தேர்தல் காலங்களில்கூட முஸ்லிம்கள் பௌத்த கட்சியினருக்கே வாக்களித்து தம் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை முஸ்லிம்களுக்கு இலங்கை மக்களின் ஆதரவு என்றும் உண்டு. ஏனெனில் நாங்கள் அவரகளுடன் ஒன்றெனக் கலந்து வாழ்கின்றோம். தேவையற்றவிதத்தில் சப்தம் போட்டு பூச்சாண்டி காட்டும் சிறு பூச்சிகளுக்கு பயந்தவரகள் அல்ல நாங்கள்.

    Now; if someone asks me to name a Gentleman right now in my view, I would never hesitate to say "Vijayamuni Soyza" because his speech is a dream come true in which he gives it a beautiful image of brotherhood, love and racial harmony in a few words. Who are Muslims? Born from the wombs of Sinhala Buddhist mothers or Hindu mothers, Muslims are more likely than any religious people in Sri Lanka to have relatives in all castes and communities from Point Pedro to Dewundra Point and from Colombo to Sangamankanda, which is why Muslims live in small numbers in small villages in this country, even though they live in small numbers. Mosques are spread all over Sri Lanka and there are Buddhist and Hindu Brothers who can argue for Muslims who are spread all over Sri Lanka. Even during election periods, Muslims have affirmed their unity by voting for the Buddhist party. Sri Lankan Muslims also have the support for the Sri Lankan Buddhist political parties. Because we live together with them since. We are not afraid of small insects that make unnecessary noises.

    ReplyDelete

Powered by Blogger.