Header Ads



கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் – பொலிஸ் பேச்சாளர்

நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் பௌத்த இந்து ஆலயங்களுக்கு தொடர்ந்தும் அதிகரித்த பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினர் வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்தே தொடர்ந்தும் வழிபாட்டுத்தலங்களுக்கு உயர்பாதுகாப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டு;ள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து பொலிஸ்நிலையங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகளவு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஞாயிற்;றுக்கிழமை ஆராதாரனைகள் முடியும் வரை படையினர் பாதுகாப்பு வழங்கியதை அவதானிக்க முடிந்துள்ளது.சில தேவாலயங்கள் பாதுகாப்பை கோரியுள்ளன.

இது ஒரு விசேட நடவடிக்கையில் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள விசேட எச்சரிக்கையை தொடர்ந்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் விசேட புலனாய்வு நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் பாதுகாப்பை கோரினால் நாங்கள் பாதுகாப்பு வழங்க தயாராகவுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் புதிய அச்சுறுத்தல்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் குறிப்பாக கண்டி பெரஹர மற்றும் கதிர்காம உற்சவம் போன்று மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்;ளோம் நாங்கள் எச்சரிக்கையுடன் இருப்போம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.