Header Ads



நான் அறிந்த சில விடயங்களை வெளியிட்டால், அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கோபித்து கொள்வார்கள் - ரணில்

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய, இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல், வாங்கல்கள் சம்பந்தமாக தான் அறிந்த சில விடயங்களை வெளியிட்டால், அரசாங்கத்தில் இருக்கும் சிலர் கோபித்து கொள்வார்கள் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கடந்த 3 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை அவரது வீட்டில் சந்தித்தனர்.

இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,

இந்த அதிகாரிகள் எழுப்பிய சில கேள்விகள் குறித்து பேசினால், அரசாங்கத்தில் இருக்கும் நபர்கள் என்னுடன் கோபித்து கொள்வார்கள்.

எவ்வாறாயினும் பிணை முறி கொடுக்கல், வாங்கல் சம்பந்ததமாக எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை. தேவை என்றால், சட்டமா அதிபர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

அந்த பிணை முறி கொடுக்கல், வாங்கல்களில் மோசடி நடக்கவில்லை.ஆனால், தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் பணிப்பாளருக்கும் இடையிலான உறவு முறையே இதில் பிரதான பிரச்சினையாக இருந்தது. இதனடிப்படையில் செல்லக் கூடாது என்ற செய்தி பேர்ப்பச்சுவல் நிறுவனத்திற்கு சென்றுள்ளது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.