July 08, 2020

சகல மத உரிமைகளையும், பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த மத  உரிமைகளையும் ஏனைய மதங்களின் உரிமையினையும்  மற்றும்  அனைத்து  பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு  அரசாங்கம் குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.  அனைத்து  மத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் சுபீட்சமான எதிர்கால  கொள்கை திட்டத்தை செயற்படுத்துவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகலை பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற இலங்கை தேசிய பிக்கு  முன்னணி, மாநாயக்க தேர்ர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

       மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டது.   கடந்த மூன்று மாத காலத்திற்கான மின்கட்டணத்தை  குறைக்க தயாராக உள்ளோம்.  கலாச்சாரத்தை பாதூகாத்தல்,  தொல்பொருள் பாதுகாத்தல் , நாட்டின் உடமைகளை பாதுகாத்தல் ஆகியவை எமது  அரசாங்கத்தின் மிகவும் நேர்த்தியான முறையின் கீழ் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன..

 முஹுது மஹா விகாரை உள்ளிட்ட  பௌத்த மத  உரிமைகளை  பாதுகாத்துக் கொண்டு ஏனைய அனைத்து மதங்களுக்கும் கௌரவமளித்து , அனைவரது உரிமைகளை   பாதுகாத்துக் கொண்டு குறுகிய காலத்தில் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.

 கடந்த  அரசாங்கத்தில்   பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு  சிறைப்படுத்தப்பட்டார்கள்.  பெரஹராவில் யானையை  பயன்படுத்தவதற்கும் தடை விதிக்கப்பட்டது. கதிர்காமம் ஆலயத்திற்குரிய  யானை  பின்னவலவிற்கு கொண்டு வரபப்ட்டது.  பொலிஸாரையும்,  வனப்பாதுகாப்ப தரப்பினரையும் இணைத்துக் கொண்டு விகாரைகளில் இருந்த  கலாசார உரிமைகள் இல்லாதொழிக்கப்ட்டன.

 முல்லைத்தீவு குருகந்தை விகாரையின்   தேரர்  இறந்த பிறகு அவரது  பூதவுடலை  தகனம் செய்வதற்கும் போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு சில அரச சார்பற்ற அமைப்புக்கள் தான் இவ்விடயத்தில் முன்னின்று செயற்பட்டன.   2015ம் ஆண்டு எம்மை தோற்கடித்தவர்களே  இவ்வாறான  செயற்பாடுகளில் ஈடுப்பட்டார்கள்.தொல்பொருட்களை பாதுகாத்தல்,  விகாரைகளை பாதுகாக்க ஒதுக்கட்ட   கலாச்சார நிதியத்தில்  பாலம, வீடுகள் ஆகியவற்றை  நிர்மாணித்தார்கள்.

  நான்   ஜனாதிபதியாக இருந்த காலத்தில்  பௌத்த  துறவிகளுக்கு காவியுடையயை வழங்க யோசனையை முன்வைக்கப்பட்டது அதனை  நான் செயற்படுத்தினேன்.  . இதற்கான  அனுஸ பல்பிடவும், லலித் வீரதுங்கவும் சிறை சென்றார்கள்.   1988 மற்றும் 1989ம் ஆண்டு  காலப்குதியில் இடம் பெற்ற   கலவரத்தை இன்று பலரும் மறந்து விட்டார்கள்.  அன்று  பௌத்த பிக்குகள் படுகொலை  செய்யப்பட்டார்கள்.

ஜனாதிபதியின்   சுபீட்சமான  எதிர்கால  கொள்கைளை  நிறைவேற்ற  ஜனாதிபதியின் கொள்கைகளை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்றம் பெற வேண்டும்.  அவ்வாறு நடைப்பெறாவிடின் மைத்திரி- ரணிலுக்கு இடையில்  பிளவு ஏற்பட்டதை போன்று   முரண்பாடுகள் தோற்றம் பெறும். .இறுதியில் மக்கள் தான்  பாதிக்கப்படுவார்கள்.

 அன்று  ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்திய  கட்சி பாராளுமன்றத்தில் அரசாங்கம் அமைத்தமையினால் யுத்த்தை முடிவிற்கு கொண்டு வர முடிந்ததோடு அபிவிருத்தி பணிகளையும்  முன்னெடுக்க  முடிந்தது.   எமது  திட்டப்படி   அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்திருந்தால் மத்திய அதிவேக நெடுஞ்சாலை பாதை நிறைவுக் கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் பல அபிவிருத்தி பணிகள்   தாமதமாகியுள்ளன. மாநாயக்க தேரர்களினதும்.  ஏனைய மத தலைவர்களின் ஆசிர்வாதத்தடனும் அபிவிருத்திபணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

3 கருத்துரைகள்:

பயிரை மேய்ந்த வேலி, இனி அப்படி மேய்வதே இல்லையாம்,பயிரைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாம்.அவனுடைய ஆடுகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை எனத் தீர்மானித்த இடையன், பாதுகாக்கும் பொறுப்பை ஓநாய்க்கு ஒப்படைத்தானாம்.

வரலாறுகளின் பயணம் நீண்ட நெடியதாகும். உலக வரலாற்றில் ஹிற்லரும் முசோலினியும் மோடியும் நிச்சயம் இடம் பெறுவார்கள். அதே சமயம் New Zealand அதிபர் Jacinda Arden, இந்திய முன்னாள் முதல்வர் Manmohan Singh, மற்றும் துருக்கி அதிபர் Recep Tayyib Erdogan ஆகியோரும் சந்தேகமின்றி இடம் பெறுவார்கள். இவரகளுல் எமது அரசியல் தலைவர்களான மகிந்தா அவரகளும் கோத்தாபய அவரகளும் எந்த அணியில் இடம் பெறுவது என்பதனை அவரகள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதை தெரிவு செய்வது மக்கள் அல்ல. இது ஒரு பொதுவான விடயம்தான்.
The journey of histories is having a long way. Hitler, Mussolini and Modi will surely take place in world history. At the same time, New Zealand President Jacinda Arden, former Indian Prime Minister Manmohan Singh and Turkish President Recep Tayyib Erdogan will also be there without a doubt. It is up to our Political Leaders Mahinda and Gotabhaya to decide which of the side they have to be in the team. It is not the people who choose it. This is a common thing.

ஏனைய மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவா முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தீர்கள்?

Post a comment