July 23, 2020

பிறப்பு சான்றிதழ்களில் இனம் குறித்து, குறிப்பிடுவதை நீக்கக்கூடாது - விமல் கடும் எதிர்ப்பு


புதிய பிறப்புசான்றிதழ்களில் இனம் குறித்து குறிப்பிடப்படுவதை நீக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதியபிறப்புச்சான்றிதழ்களில் இனத்தை குறிப்பிடாமல் இலங்கையர்கள் என மாத்திரம் குறிப்பிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

விண்ணப்பபடிவத்திலும் இனம் குறித்த கேள்விகள் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய விமல்வீரவன்ச இதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இதற்கு ஒருபோதும் இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்துரைகள்:

பிறப்புச் சான்றிதழ்களில் சாதி மற்றும் மதங்களைப் பற்றிக் குறிப்பினை தவிர்க்க வேணடும் என்ற கொள்கை, விமல் வீரவங்ச போன்றோர் இனத்துவ அரசியல் கட்சிகளை ஆரம்பித்து நாட்டில் 1971ல் ஏப்ரில் கலவரத்திற்கு அடிகோலுவதற்கு முன்பிருந்தே, இலங்கையின் புத்திஜீவிகள் மட்டத்தில் இருந்து வரக்கூடிய ஒரு விடயமாகும். பின்னர் அது எமது மதிப்புக்குரிய பிரதமர் மகிந்த அவர்களின் எண்ணத்திலும் வந்துள்ளது மகிழ்வுக்குரியதாகும். விமலின் இனரீதியான கண்ணோட்டத்தில் அது முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் என்ற தவறான காரணத்திற்காக அதனை அவர் எதிர்க்கின்றார். முஸ்லிம்களிடத்தில் சாதியே கிடையாது. முஸ்லிம்களின் பிறப்பு சான்றிதழ்களில் மதத்தைக் குறிப்பிடுவது அவர்களுக்கு மிக இன்றியமையாததாகும். வெளிநாட்டுப் பல்கலைகளிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும் அவரகளுககு அது பெரும் நன்மையை ஏற்படுத்தும். ஆயினும் சிங்களவரகள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் சாதிப்பிரச்சினைகள் உண்டு. உயர்சாதி இனத்தவரகள் கீழ் மக்களை வேற்றுககண் கொண்டு பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. ஆயினும் வட கிழக்கில் வாழும் இந்து கிறிஸ்தவ மக்களிடம் சாதி முறைமை மிகவும் குறைந்துவிட்டது. பிறப்புச் சான்றிதழ்களில் சாதிகள் ஒழிக்கப்பட்டுவரும இக்காலத்தில் அது கூடாது என்று கூறும் விமலின் வாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பொதுப் பெரமுனவிற்கு விமலைப் போன்றவரகளால் நன்மைகள் ஏற்படும் என்பதைவிட தீமைகளே மிக அதிகம் என்பதனை பிரதமர் ஜனாதிபதி அவரகளும் மற்றும் சிங்கள தமிழ் பொது மக்களும் தலைவரகளும் புத்திஜீவிகளும் உணர்ந்து விமல் வீரவங்சவிற்கு மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்குமுகமாக நடந்து கொள்ளும் இனத்துவவாதிகளுக்கும் தக்க பதிலடியினைக் கொடுக்க முன்வரல் வேண்டும்.

The policy of avoiding reference to caste and religion in birth certificates is something that could have come from Sri Lankan intellectuals even before ethnic political parties such as Wimal Weerawansa started and set the stage for riots in the country in April 1971. It is gratifying that then it has come to the minds of our esteemed Prime Minister Mahinda Rajapaksa Sir (MR). Wimal opposes it for the false reason that his racist perspective it benefits Muslims. Muslims have no caste. Mentioning religion in the birth certificates of Muslims is very essential for them. It will be of great benefit to them in foreign universities and employment. However, there are caste issues among Sinhalese and Tamils. There are many instances where people under the upper castes can be viewed with a different eye. The caste system, however, has greatly diminished among the Hindu-Christian population living in the North East. Vimal's argument that caste should not be abolished in birth certificates is highly reprehensible. The Prime Minister and the Sinhala public, leaders and intellectuals must realize that the disadvantages outweigh the benefits to the general public, such as Wimal, and come forward to retaliate not only against Wimal Weerawansa but also against the racists who are undermining the country's development.

Post a comment