Header Ads



ரணில் என்னை ஆட்டுவிக்க பார்த்தார், நான் அவரை ஆட்டுவித்தேன்: மைத்திரி

ஜனாதிபதியாக பதவி வகித்த சுமார் ஐந்தாண்டு காலத்தில் தான் கசப்பான அனுபவங்களை பெற்றுக் கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டதை முழு நாடும் அறியும்.

பிரதமரான ரணில் விக்ரமசிங்க தனக்கு தேவையான வகையில் என்னை ஆட்டிவிக்க முயற்சித்தார்.

எனினும் அவரால் அதனை செய்ய முடியாமல் போனது. ரணில் விக்ரமசிங்கவை எனக்கு தேவையானபடி ஆட்டுவித்தேன்.

இதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருப்பதை தடுத்து, இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. ஒட்டு மொத்த நாடே கசப்பான அனுபவத்தை அனுபவித்ததை விடவா?

    ReplyDelete
  2. இவனுடைய வாயை மூடிக் கொண்டிருந்தால் பொது மக்களுக்களின் பிரச்சினைகளின் ஒரு பகுதிக்கான தீர்வை அவர்களே தேடிக் கொள்வார்கள். எனவே, அசுத்தமான வாயை மூடுமாறு பொதுமக்கள் சார்பாகக் கேட்கின்றேன்.

    ReplyDelete
  3. உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட அந்த இழுபறிகள் ஒட்டுமொத்த நாட்டையும்,ஆட்டிப் படைத்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் நீங்கள் இருவரும் ஆடிய ஆட்டங்கள் மறக்கக் கூடியதா?

    ReplyDelete

Powered by Blogger.