Header Ads



முஸ்லிம்களே,, சிறந்த ஜனாதிபதி பிரதமரை பெற்றுள்ளோம் - மொட்டுக்கு ஆதரவு அளியுங்கள்...!

- Fazlin Wahid -

இந்தத் தேர்தலிலே ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது போடும் கோஷம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஆளும் கட்சிக்கு கொடுக்கவேண்டாம் என்பதாகும்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை எதற்குத் தேவை என்று அவர்கள் கூறுகிறார்களா ? எத்தனை பேருக்கு இந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை சம்பந்தமான விளக்கம் இருக்கின்றதுஇலங்கையிலுள்ள அரசியலமைப்புத் திட்டத்திற்கு முரணாக சட்டதிட்டங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதனை நிறைவேற்றுவதற்கு தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.அல்லது அரசியலமைப்பை மாற்றுவதற்கு தான் தேவை. சாதாரண சட்டங்களுக்கு இது அவசியமில்லை. பாராளுமன்ற அமர்வில் சமூகமளித்திருந்த உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றினால் அதாவது பாராளுமன்றத்தில் சமூகம் அளித்துள்ள மொத்த உறுப்பினர்களில் அதிகளவான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் போதும் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு .

இன்று இருக்கும் அரசியலமைப்புச் சட்டமானது சிறுபான்மை இனமான எங்களுக்கு நன்மை பயக்கின்றதா  இல்லையா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1978 ஆம் ஆண்டு ஜெயவர்த்தன அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டமானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை பாராளுமன்றத் தேர்தல்களில் அமல்படுத்தியது மட்டுமல்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் 19 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன .அதிலே பதினெட்டாவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து பிரதமருக்கு கூடிய அதிகாரம் வழங்கும் திருத்தமாகும். இலங்கை சிறுபான்மை சமூகத்துக்கு முன்னர் இருந்த ஜனாதிபதியின்  அதிகா முறையை அதிகளவான நன்மையை தந்தது .சிறுபான்மை சமூகத்தின் ஆதரவை என்றும் பெரும்பான்மை சமூகம் வேண்டிநிற்கும் அல்லது கூடுதலான சந்தர்ப்பங்களில் தேவைப்படும் என்ற நிலையே இருந்தது. இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமலேயே ஒரு ஜனாதிபதி இலங்கையில் தெரிவு செய்யப்பட முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. இன்றும் இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை இருந்தாலும் அது முன்னர் இருந்ததை விட அதிகாரம் குறைந்ததாகும் .

இந்த நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் பிரேரணை பாராளுமன்றத்திற்கு வந்தபொழுது அதனை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டது. அதற்கு சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியது. இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன 13  பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த பாராளுமன்றத்தில் கொண்டிருந்தன. சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு அத்தியாவசியமாக இருந்தது. இன்றைய எமது முஸ்லிம் தலைவர்கள் என்று அழைக்கப்படும் ஹக்கீமும் றிசாட்டும் ஆரம்பத்திலே இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது போல் நடித்தார்கள் .அது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்ல சிறுபான்மை சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியதோடு அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும் கூறினார்கள் ஆனால் நடந்ததோ வேறு அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வு பத்து மணிக்கும் அப்பா நீடித்து இந்த இரண்டு தலைவர்களையும் மூளைச்சலவை செய்து அரசாங்கம் திருத்தச் சட்டமூலத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதை எத்தனை பேர் அறிவர். அவர்கள் அன்று அந்த ஆதரவை வழங்காமல் இருந்திருந்தால்  ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவை பெரும்பான்மை சமூகம் இன்று இருப்பதைவிட அதிகளவில் வேண்டி  நின்றிருக்கும். அவர்கள் அன்று செய்தது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான துரோகமாகும் .இந்த துரோகத்தை செய்தவர்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளினால்  ஜனாதிபதியாகி பின்னர்  பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியாகும்.

 தமது குறுகிய அரசியல் நோக்கத்தில் பட்டங்களையும் பதவிகளையும் காப்பாற்றுவதற்காகவும் பணமுடிச்சுக்காகவும் தலைவர்கள் சோரம் போனார்களா என்றுகூட சிந்திக்க வேண்டியுள்ளது. அன்று பெரும்பான்மையை கொடுத்து அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை குறைத்து விட்டு இன்று அதே தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலிலே அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொடுக்க வேண்டாம் என்று கூறுகின்றார்கள். இதைவிட விந்தையான விடயம் ஏதாவது உள்ளதா.மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக முஸ்லிம் சமூகத்தில் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல் அரசியலமைப்பு திருத்தங்களிற்கே மூன்றில் இரண்டு அவசியம்..அதனை   கொடுப்பதை தடை செய்ய முஸ்லிம் சமூகம் எதிர்க் கட்சிக்கு வாக்களிக்குமானால் ஆளும் கட்சியிலே முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் .கிராமப்புறங்களில் உள்ள அல்லது நகர்ப்புறங்களில் உள்ள ஒரு சங்கத்தில் எல்லோருமே முஸ்லிம்களாக இருந்தாலும் கொஞ்சம் பிரச்சினைக்கு உரிய ஒருவர் இருந்தால்  அவர்  சமூகமளிக்காத விடத்து உடனடியாக அவருக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்வர்.

 அப்படியானால் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் ஒரு முஸ்லிம் இல்லாது  போனால் அல்லது அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இல்லாது போனால்  இந்த முஸ்லீம் சமூகத்துக்கு எதிராக பிரேரணைகளைக் கொண்டு வந்தால் அதனை நிறைவேற்றி கொள்ளுவது மிக இலகுவாக இருக்கும். அதனை எதிர்த்துப் பேசுவதற்கு எவரும் இருக்க மாட்டார். ஆளும் கட்சிக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை அழைக்க மாட்டார்கள். நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
 சும்மா நாங்கள் வேலைவெட்டி இல்லாமல் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க பிரச்சாரத்தை நடத்தவில்லை. இதை ஒரு சமூக கடமையாக கருதியே நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம். நாங்கள் பணத்துக்கு சோரம் போனவர்கள் அல்ல. 

முஸ்லிம் சமூகம் குறிப்பாக கண்டி முஸ்லிம்கள் தமக்கு ஒரு முஸ்லிம் வேட்பாளரை தெரிவு செய்ய தந்திருக்கும் சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் ஆளும் கட்சி சார்பாக ஒரு அமைச்சர் கிடைக்காத வரலாற்றுத் தவறை செய்ய வேண்டாம் .ஆளும் கட்சி அமைச்சரவையில் பாராளுமன்ற குழுவில் எமது குரலை எழுப்புவதற்கு  ஒருவர் இல்லாத நிலையை உருவாக்க துணை போகாதீர்கள் . எங்களது சமூகம் சார்பாக ஒருவர் இருந்தால் தான் எமது சமூகத்துக்கு எதிரான பிரேரணைகள் வந்தால் அதனை எதிர்த்துப் பேசும் சந்தர்ப்பம் இருக்கும். எமக்கு எதிரான பிரேரணைகளை கொண்டு வரவும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தயங்குவர் ஆனால் ஒருவருமே இல்லாவிடின் எங்களுக்கு என்று இருக்கும் தனியான உரிமைகளுக்கு  மாற்றங்களை கொண்டு வந்தால் அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளால் முடியாது. எதிர்த்தாலும் அதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளால்  முடியாது. தனக்கு ஆதரவு அளிக்காத சமூகத்துக்கு எதிராக பிரேரணைகளை  கொண்டுவர பெரும்பான்மை சமூகமும் தயங்காது. நாங்கள் என்ன கூறினாலும் ஒவ்வொரு இனத்துக்கும் தனது இனத்தின் மீது கருணை அதிகமாகும் .அடுத்த இனத்தின் மீது வெறுப்பு தொடர்ந்து  கொண்டே இருக்கின்றது. இதிலே சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடு கிடையாது .

தமது தலைவரின், கட்சிப் பிரதிநிதியின் வெற்றிக்காக சமூகத்தை குழிதோண்டி புதைக்க முற்படுகின்றனர் .இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மை சமூகத்துக்கு இதைத்தான் செய்தார்கள் .பாராளுமன்றத் தேர்தலிலே தமக்கு அதிகளவான பிரதிநிதிகள் தெரிவு செய்ய சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் தோல்வியுறும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்தனர். முஸ்லிம் சமூகத்தை அவர்கள் பிழையாக வழி நடத்தினர்.
 
கண்டி மாவட்டத்தில் ஆளும் மொட்டுக் கட்சிக்கு ஆதரவளிக்க எமக்கு தந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். சிறந்த ஆளுமையுள்ள இனவாதமற்ற திறமையான இலங்கையர் என்று எம் எல்லோரையும் ஒன்றாக நோக்கும் ஒரு சிறந்த ஜனாதிபதியை பெற்றுள்ளோம் .அவரின் கரங்களைப் பலப்படுத்துங்கள் . அவரின் மொட்டுக்கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.

நான் இவ்வாறு எழுதினால் சில பேஸ்புக் வீரர்கள் என்னை  கோழை என்பர். முட்டாள் என்பர் சமூகத் துரோகி என்பர் இவையெல்லாம் எனக்கு பூமாலைகள் ஆகத்தான் விழுகின்றன.

8 comments:

  1. எரியும் ஜனாஸா அணையாத வரை
    விரியாது மொட்டு இனி என்றைக்குமே!

    ReplyDelete
  2. dear srilanka

    dont belive this rajapaksa thugs , after election incase of getting 2/3 majority
    have plot against muslims and tamil ,these thugs had done against muslim community following grees man , aluthgama roits, digana roits ,chruch bomb blast , minwangoda case broken mosque ,more

    dont vote following party

    podujana parmuna
    unp
    slfp

    ReplyDelete
  3. Only Allah knows what going to happen after the election...

    ReplyDelete
  4. அன்புள்ள சகோதரர் பாஸ்லிம் வைட்.உங்கள் கட்டுரையில் நீங்கள் கூறியது யதார்த்தம் மற்றும் உண்மை. இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய முஸ்லிம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ். எஸ்.எல்.பி.பி முஸ்லீம் சம்மேளனம் மேற்கொண்ட பிரச்சாரம் பாராட்டத்தக்கது, ஆனால் முஸ்லீம் வாக்கு வங்கி - வாக்காளர்கள் வாக்குச் சாவடிகள்ளுக்கு சென்று எஸ்.எல்.பி.பி-க்கு வாக்க உறுதிப்படுத்த சுறுசுறுப்பாக எஸ்.எல்.பி.பி முஸ்லீம் சம்மேளனம் வேலை செய்ய வேண்டும். அரசியல் கூட்டங்களில் பேசுவது போதாது. இதில் அவர்கள் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். உங்கள் கட்டுரையில் நீங்கள் வெளிப்படுத்திய முக்கியமான அரசியல் செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு அனுப்பவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். நீங்கள் கூறியது போல, கண்டி முஸ்லிம் வாக்காளர்கள் கண்டி மாவட்டத்தில் ஆளும் மொட்டுக் கட்சிக்கு ஆதரவளிக்க முஸ்லீம்களுக்கு
    தந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது.
    சிறந்த ஆளுமையுள்ள இனவாதமற்ற திறமையான இலங்கையர் என்று எம் எல்லோரையும் ஒன்றாக நோக்கும் ஒரு சிறந்த ஜனாதிபதியை பெற்றுள்ளோம் .அவரின் கரங்களைப் பலப்படுத்துங்கள் . அவரின் மொட்டுக்கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்ற
    இந்த கோரிக்கை முஸ்லீம் குரல் முழுமையாக ஆதரிக்கிறது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. What did the pohottu promise you for writing this shit?

    ReplyDelete
  6. For some people who cannot see "REALITY" and do not understand "POLITICAL LOGIC" viz-a-viz the Muslim community, the above article and comment made by "The Muslim Voce" cannot be digested literally. Therefor people like ANVER who measure things in return and curruption will always react as Mr. Anver has done in his comments. Those who understand the "REALITY" will act accordingly, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  7. Faslin wahid உங்களுக்கு மட்டுமே இந்த கட்டுரை..

    ReplyDelete
  8. அநேகமான முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு option (சஜித் ஜனாதிபதி ஆகணும்) கொடுத்து துஆ கேட்டார்கள் இது தான் கசப்பான உண்மை
    உண்மையில் ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் இதனை நம்பும் ஒவ்வொருத்தரும் இது வரை ஏமாற்றியவர்களை தூர வீசிவிட்டு புதியவர்களின் நடவடிக்கைகளில் நம்புபவர்களை தெரிவு செய்யலாம்
    கொடுத்து ஏமாந்து போவதை விட இவர்களுக்கும் கொடுத்து பார்க்கலாமே
    இது வரை முஸ்லிம்களை கருவருத்த கட்சி ஐ தே க தான் சிங்ஹல பல மண்டலய ,வீரவிதான .... தொடக்கம் இன்றுள்ள பொதுபல வரை ஊட்டி வளர்த்தவர்கள் ஐ தே க சேர்ந்தவர்கள் இது மிக தெளிவான உண்மை

    ReplyDelete

Powered by Blogger.