Header Ads



ஜனாதிபதி கோட்டாபய மிகவும், அழகாக வேலைகளை செய்கிறார் - அலி சப்றி

சிறுபான்மை இனத்தவர்கள் ஐக்கியமாக வாழக் கூடிய உலகில் மிகவும் நட்புறவான இனம் சிங்கள பௌத்த இன மக்கள் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானது, அவற்றை தீர்த்துக்கொள்ள முடியும்.

இனவாதத்தின் பின்னால் சென்று இனவாத அரசியலை செய்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக மாறியது. அது மற்றுமொரு காங்கிரஸாக மாறி காங்கிரஸ் குட்டிகளை ஈன்றது. நாம் ஒரு நாடாக முன்நோக்கி செல்ல வேண்டுமாயின் நாம் இலங்கையராக ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவை பற்றி எப்படியான பொய்களை கூறினார்கள். கோட்டாபய ராஜபக்சவை பெரிய பிசாசாக உருவகப்படுத்தினார்கள். எனினும் கடந்த 8 மாதங்கள் ஜனாதிபதியாக மிகவும் அழகாக வேலைகளை செய்து வருகிறார் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Yes, yes, athuthaan Muslims kku adi paduthu...

    ReplyDelete
  2. இவர் சுய நினைவுடன்தான் பேசுகிறாரா?
    நிச்சயமாக எமது சமுகத்தை பாதாளத்தில் தள்ளி விடுவார் இவர்.

    ReplyDelete
  3. ஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்,என்று முஸ்லீம் குரல் ("The Muslim Voice") 2015 முதல் இருந்து இந்த விஷயத்தை வலியுறுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதைத்தான் கோதபய ராஜபக்ஷ புதிய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், எங்கள் “மாத்ருபூமியா” என்கிற மக்களிடமிருந்தும் கேட்கிறார். இந்த அரசியல் வாய்ப்பை முஸ்லிம்கள் சாதகமாகப் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 5,2020 இல் நடைபெறும் அடுத்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் வாக்கு வங்கி எஸ்.எல்.பி.பி (SLPP,பொட்டுவா) வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை வழங்குவதை உறுதிசெய்ய முஸ்லிம் ஒழுங்கமைக்க இது சரியான தருணம். முஸ்லீம் சமூகம் மற்றும் முஸ்லீம் வாக்கு வங்கி ஆகியோருக்குள் புதிய அரசியல் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் உள்ளன, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தது ஐ தே க இல் வருபவர்
    தான் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்க மாட்டார் என்று அல்லாஹ்வுக்கு சொல்லிக்கொடுத்து
    அதனால் தான் திரும்பவும் அதே ஐ தே க இன் வேற்பாளர்களை தேடி ஓடுகிறார்கள்
    தகுதியான இளையவர்கள் சுயேற்சையாக களம் இறங்கியும் சில அறிவுகெட்ட முட்டால்கள் திருந்த மாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.