July 15, 2020

இராமண் நபியுமல்ல, இராவணன் முஸ்லிமும் அல்ல

உலமா கட்சித் தலைவர் முபாரக் மவ்லவி அவர்கள் இராமன் மற்றும் இராவணன் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் சில ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது.

கோணேஷ்வரம் குறித்து கடந்த வாரம் ஒரு பவுத்த பிக்கு தெரிவித்த கருத்துக்கு தமிழ் தலைமைகள் தமது எதிர்ப்பை வெளியிட்ட அதே வேலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் கோணேஷ்வரம் உள்ளிட்ட 5 ஈஷ்வரங்கள் விஜயனின் இலங்கை வருகைக்கு முன்னரே இலங்கை தீவில் அமையப் பெற்றிருந்தன என ஒரு ஆங்கில ஆய்வாளரை மேற்கோள் காட்டி பதிலளித்திருந்தார்.

இந்தப் பின்னனியில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் இராவணன் என்ற தவறு செய்யும் ஒரு மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள சமாதிகளின் நீளங்களை வைத்தும் தனது கருத்துக்கு வலு சேர்க்க முனைந்துள்ளார்.

முதலாவது விவகாரம் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறுகள் தொடர்பிலோ அல்லது இலங்கையில் பூர்வீகக் குடிகள் யார்? என்பது தொடர்பிலோ நாம் கருத்துக்களை வெளியிடுவதாக இருந்தால் அது தொடர்பான ஏற்க்கத்தக்க சரியான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து நமது கருத்துக்களை நிறுவ வேண்டும். 

இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம் என ஊகங்களை வைத்தும் கடந்த கால பெயர்களை திட்டமிட்டு மறுவ வைத்தும் நமது கருத்துக்களை நிறுவ முட்பட்டால் அது அடிமட்ட முட்டால் தனமாக பார்க்கப்படுமே தவிர வரலாற்று ஆதாரமாக பார்கக்ப்பட மாட்டாது.

இலங்கையில் பூர்வீக வரலாறு தொடர்பில் ஆராயும் போது இலங்கையின் ஆதிக் குடிகளாக இலங்கை சோனகர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் என பலரும் வரலாறுகளில் இடம் பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் முதலானவர்கள் என்ற சர்சையினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. ஆனால் அனைவரும் ஆதிக் குடிகளாக இருந்துள்ளார்கள் என்பதில் யாரும் முரண்பட முடியாதவாறு ஆதாரங்கள் கிடைக்கிறது.

இந்நிலையில் இராமன் நபியென்றும் இராவணன் தீய காரியங்களில் ஈடுபட்ட மன்னனென்றும் அவனைத் திருத்த நபியாக இராமன் வந்திருக்கலாம் என்றும் கற்பனையாக கதையளப்பது தேர்தல் காலத்தில் கூட இலாபத்தை பெற்றுத் தராது என்பதை நண்பர் முபாரக் மவ்லவி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இராமன் என்றொரு கதாபாத்திரம் உண்மையில் இருந்ததா என்பதே இந்திய ஆராய்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்சையான ஒரு விவகாரமாகும். இராமன் என்றொரு கதாபாத்திரம் உண்மையில் உலகில் வாழவில்லை என்று பல ஆராய்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.

வால்மீகி எழுதியி முதலாவது இராமாயணத்தில் தான் இராமன் என்றொரு கதாபாத்திரத்தை முதன்மையாக குறிப்பிட்டார். அதுவும் குறித்த நபர் தற்போதைய நேபாளத்தில் பிறந்தார் என்பதுதான் வால்மீகி இராமாயணம் தரும் செய்தியாகும் - நேபாள பிரதமரும் அண்மையில் இதனை தெரிவித்திருந்தார்.

இராமண், சீதை, இலக்குவணன் போன்ற இராமாயன கதாபாத்திரங்கள் மீது பெரும் சர்சைகள் இருக்கும் நிலையில், அப்படியொரு கதாபாத்திரம் இருந்ததா? இல்லையா? என்ற சர்சைக்கே முடிவில்லாத போது அவர் நபியாக இருந்திருக்கலாம் என ஊகிப்பதும் அதனை பொது வெளியில் தெரிவிப்பதும் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ பெருமை சேர்க்காது என்பதை மவ்லவி உணர வேண்டும்.

இராமன் என்ற கதாபாத்திரத்தின் வரலாற்றை சாதாரணமாக படித்துப் பார்த்தாலே இராமனுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

இராமானத்தில் இராமனின் எந்த செயல்பாடுகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக்கு தொடர்புடையதாக இல்லை. அவர் அல்லாஹ்வை வணங்குமாறு போதிக்கவும் இல்லை. தன்னை பின்பற்றுமாறு வலியுறுத்தவும் இல்லை. 

சீதை - என்ற கதாபாத்திரம் இராமனின் மனைவியாக பேசப்படுகிறது. ஒரு நபியின் மனைவியின் செயல்பாடுகளில் சிறு பகுதி கூட சீதையென்ற கதாபாத்திரத்திற்கு ஒப்பாக வில்லை என்பதை அவர் பற்றிய புரிதலை பெற்றுக் கொண்ட எந்தவொரு சாதாரண முஸ்லிமும் புரிந்து கொள்வார்கள்.

சீதை இலங்கைக்கு கடத்தி வரப்படவே இல்லை. அவர் தானாகத்தான் இலங்கை வந்தார் என்று இராமாயணத்தை மேற்கோள் காட்டி தந்தை பெரியார் போன்றவர்கள் வாதிடுவதும் இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

விஜயனின் இலங்கை வருகைக்கு முன்னர் இங்கு வாழ்ந்தவர்கள் ஆதாமின் வாரிசுகள் என தான் நம்புவதாக நண்பர் முபாரக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் ஆதாம் தான் இறைவனால் உலகில் படைக்கப்பட்ட முதல்…

அடுத்ததாக சீதா என்ற சீதையை செய்யிதா என்ற பெயருடன் தொடர்பு படுத்தியுள்ளார் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள். இஸ்லாமிய வரலாற்றில் செய்யிதா என்றதொரு பிரபல கதாபாத்திரம் நாமறிந்த வரை இல்லை. அப்படியே இருந்தாலும் சீதா என்ற வால்மீகி இராமாயணத்திற்கும் செய்யிதாவுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. காரணம் சீதா என்பது இந்து இதிகாசங்கள் பற்றியது. செய்யிதா என்பது அரபி.

இலக்குமணன் - லுக்மான் ?

அதே போல் இராமாயண இதிகாசத்தின்படி இலக்குமணனாக குறிப்பிடப்படும் இராமனின் சகோதரனை லுக்மான் என்பதாக கற்பனை செய்துள்ளார் முபாரக் அப்துல் மஜீத்.

லுக்மான் என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் கூறும் ஓர் சிறந்த நல்லடியார். அவர் தன் மகனுக்கு கூறிய அற்புதமான அறிவுரைகளை தனியொரு அத்தியாயமாக (31) திருமறைக் குர்ஆனில் இறைவன் அறிவித்துள்ளான்.

இந்த லுக்மானுக்கும் இலக்குமணனுக்கும் இலங்கை தீவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

இவர் இராமனுடன் வாழவும் இல்லை.  இராமனுடன் வனவாசம் செல்லவும் இ்லலை. அப்படியொரு வரலாறு இஸ்லாத்திலும் இல்லை. இராமாயணத்திலும் இல்லை. 

ஆக இங்கும் தனது ஆழமான அற்புதமான அலாதியான கற்பனா திறனை வெளிப்படுத்தியுள்ளார் முபாரக் அப்துல் மஜீத்.

அனுமான் - நூமான் ?

அதே போல் அனுமான் என்ற இராமாயணத்தின் குரங்கு கதாபாத்திரத்தை நூமான் என மாற்றியுள்ளார் முபாரக் அப்துல் மஜீத். 

இஸ்லாமிய வரலாற்றில் நூமான் என்றதொரு பிரபல கதாபாத்திரம் நாமறிந்த வரை இல்லை. - சில நபித் தோழர்களின் பெயர்கள் நுஃமான் என்பதாக இடம் பெற்றுள்ளது.

இராமாயணம் கூறும் அனுமான் என்பது ஒரு குரங்கு அது சீதையை இராவணன் இலங்காபுரி என்ற இலங்கைக்கு கடத்தி வந்ததை கண்டறிந்து இராமணுக்கு தகவல் சொன்னதாக இராமாயண இதிகாசம் கூறுகிறது. இந்த குரங்குக்கும் நூமான் என்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

எவ்வித ஆதாரங்களோ அடிப்படைகளோ இல்லாமல் இங்கும் ஒரு குரங்கை மனிதனாக்கி குரங்கையும் முஸ்லிமாக்கும் வேலையை பார்க்க முனைந்திருக்கிறார் முபாரக் அப்துல் மஜீத்.

ஆக இது தொடர்பான நண்பர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் அனைத்து கருத்துக்களும் வெரும் கற்பனையும், ஊகங்களுமாகவே இருக்கிறது. இதில் எவ்வித வரலாற்று நியாயங்களோ, தர்க்கங்களோ, ஆதாரங்களோ கிடையாது. 

இப்படியான செய்திகளை வைத்து முஸ்லிம்களை இலங்கையில் பூர்வீக குடிகள் என்று வாதிட முனைவது கேளிக் கூத்தானதாகும்.

நண்பர் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக எழுதிய ஒரு தொடர் ஆக்கத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படித்த நேரத்தில் சிரிக்கும் வகையிலான கற்பனைகளை பார்த்து கவலை கொண்டேன். வரலாற்றை வரலாறாக ஒப்புவிக்காமல் கற்பனையாக ஒப்பு விப்பதினால் நமது வரலாற்றை நிரூபிக்க முடியாது.

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்.

இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாம் வருவதற்கு முன்பதாக இங்கு சோனக - யோனக இனமாக வாழ்ந்தவர்கள் இஸ்லாத்தின் இலங்கை வருகையின் பின்னால் நமது மூதாதையர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் மதத்தினால் நாம் முஸ்லிம்களாகவும் இனத்தினால் சோனகர்களாகவும் மாறியுள்ளோம்.

நமது பூர்வீக வரலாறுகள் மிகத் தெளிவான தொல்லியர் ஆதாரங்களை கொண்டு பல ஆய்வாளர்களினால் தொகுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக மறைந்த ஆய்வாளர் லோனா தேவராஜாவின் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வு மெச்சத்தக்கது. அதே போல் மறைந்த எழுத்தாளர் சுக்ரி அவர்களும் ஓரளவுக்கான தனது முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நிகழ்வுகளை நூலாக ஆக்கினார்.

முன்னால் கிழக்கு மாகாண ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தனது 10 வருடத்திற்கும் மேலான முயற்சியினால் காத்தான்குடியில் பூர்வீக நூதனசாலை ஒன்றையே உருவாக்கியுள்ளார். குறித்த நூதனசாலையில் நமது பூர்வீகம் பற்றிய ஆதாரங்கள் நிருவப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆதார நூல்கள் தனிப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. 

எல்லாவெற்றுக்கும் மேலாக இலங்கை தொல்லியல் துறை குறித்த நூதனசாலையை பார்வையிட்டு அவற்றை உண்மை படுத்தி சான்றளித்துள்ளதுடன், இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நூதனசாலையாகவும் அதனை அறிவித்துள்ளார்கள். ஆக அங்கிருக்கும் தரவுகளை இலங்கை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது என்று அர்த்தமாகி விட்டது.

இப்படி பல ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், சமூக தொண்டாற்றியவர்கள் நமது பூர்வீகத்தை குறிக்கும் ஆதாரங்களை மிகத் தெளிவாக, துள்ளியமாக தொகுத்துள்ள நிலையில் முபாரக் அப்துல் மஜீத் போன்றவர்கள் கற்பனையாக வரலாறுகளை உருவாக்குவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். 

இப்படியான கற்பனைகளினால் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ, இலங்கை முஸ்லிம்களுக்கோ எவ்வித நன்மைகளோ பெருமைகளோ கிடைக்கப் போவதில்லை. மாறாக பொய்யான வரலாறுகளை உருவாக்கி பெருமை தேட முனைகிறார்கள் என்ற அவப்பெயர் மாத்திரம் தான் நமக்கு மிஞ்சி விடும். 

இதுவரை நம் சமூக ஆர்வலர்கள் தொகுத்துள்ள அனைத்து வரலாற்று செய்திகளையும் கேளிக்கூத்தாக்கும் காரியத்தில் முபாரக் அப்துல் மஜீத் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.  என்பதுடன் வரலாற்றை அறிந்து கொள்வதில் முபாரக் மவ்லவி அவர்களுக்கு ஆர்வம் இருந்தால் காத்தான்குடி நூதனசாலையில் ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள நூல்களை கால நேரத்தை ஒதுக்கி படித்தால் நன்று என்பது எனது ஆலோசனை.

ரஸ்மின் MISc 

துணை தலைவர், 
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

10 கருத்துரைகள்:

Good clarification. JazakAllah khairan.

முபாரக் மெளலவி அவர்களுக்கு இஸ்லாம் பற்றியும் அதன் வரலாறு பற்யும்தெரியாது என்பதை அவரே நிரூத்திருக்கிறார்.

Ramayana is a fictional story. Ravana, Rama, Seetha etc. are all fictional characters.

I am not involved with 4Thawheeth Jamaath in SL; however, the argument that you make is excellent. May Allah guide this Allama Mubarak maulavi for not making silly statements like these.

ராவ‌ண், இராவ‌ண‌ன் என்ற‌ பிராவ‌ன் முஸ்லிம் என்கிறேன். ஆனால் த‌மிழ‌ர்க‌ள் ஈரானிய‌ர் என‌ நான் சொல்ல‌வில்லை. சிவ‌னை ஷியாம் என்றும் சொல்ல‌வில்லை. இது என் பெய‌ரில் இட்டுக்க‌ட்டு.
சிவ‌னை நான் உல‌கின் முத‌ல் ம‌னித‌ சீவ‌ன் என்கிறேன். அவ‌ரைத்தான் முஸ்லிம்கள் நாம் ஆத‌ம் என்கிறோம். அவ‌ர் ம‌க‌ன் சேதுவை சீது ந‌பி என்கிறோம்.

இந்திய‌ ம‌த‌த்தை பின்ப‌ற்றும் இந்துக்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ உல‌கில் உள்ள‌ அனைவ‌ரும் ஆத‌ம் அவ்வை என்ற‌ முஸ்லிம் பெற்றோருக்கு பிற‌ந்த‌வ‌ர்க‌ள் என்றும் நாம் அனைவ‌ரும் பிற‌ப்பால் ச‌கோத‌ர‌ர்க‌ள் என்கிறேன்.
பிற‌க்கும் ஒவ்வொரு குழ‌ந்தையும் முஸ்லிமாக‌வே பிற‌க்கின்ற‌ன‌. அவ‌ற்றின் பெற்றோரே அக்குழ‌ந்தைக‌ளை பிற‌ ம‌த‌த்த‌வ‌ராக‌ மாற்றுகின்ற‌ன‌ர் என‌ எம‌து க‌ண்ம‌னி முஹ‌ம்ம‌து ந‌பிக‌ள் நாய‌க‌ம் சொன்ன‌தை நான் சொல்கிறேன்.
இந்துவோ, கிறிஸ்த‌வ‌னோ பிற‌ப்பால் முஸ்லிமான‌ எம‌து ச‌கோத‌ர‌ர்க‌ள் என்கிறேன்.

இந்து க‌ட‌வுள்க‌ளை எம‌து க‌ட‌வுள்க‌ள் என‌ நான் சொல்ல‌வில்லை. இந்துக்க‌ளுக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் முஸ்லிம்க‌ளுக்குள் க‌ட‌வுள் ஒருவ‌ர்தான் என்கிறேன். அச‌ல் இந்து ம‌த‌மும் அனைத்து ம‌த‌ங்க‌ளும் க‌ட‌வுள் ஒருவ‌ன் என்றே சொல்கின்ற‌ன‌.

இவ‌ற்றையெல்லா நான் சொல்வ‌த‌ன் மூல‌ம் மொழிச்ச‌ண்டை, ம‌த‌ச்ச‌ண்டை வேண்டாம் என்றும் நாம் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ள் என்கிறேன். இது த‌ப்பா?

த‌மிழ‌ர்க‌ள் அரேபிய‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌வ‌ர்க‌ள் என‌ நான் சொல்ல‌வில்லை.
ஆனால் அரேபிய‌ரும், பார‌சீக‌ரும், சீன‌ரும், ஐரோப்பிய‌ரும் ப‌ல்லாயிர‌ம் ஆண்டுகள் முன் இல‌ங்கையில் இருந்து ம‌த்திய‌ கிழ‌க்கு உட்ப‌ட‌ உல‌கின் ப‌ல‌ பாக‌ங்க‌ளுக்கும் சென்ற‌வ‌ர்க‌ளே என்ப‌தே என் வாத‌ம்.

இஸ்லாத்தின் வ‌ர‌லாறு ம‌ற்றும் விஞ்ஞான‌மும் ஆசியாவிலேயே ம‌னித‌ ஆர‌ம்ப‌ம் இருந்த‌தாக‌ கூறுகிற‌து. இல‌ங்கை அந்நாளில் இந்தியாவுட‌னும் ஆபிரிக்காவுட‌னும் ஒட்டியே இருந்த‌து.

பின்ன‌ர் ம‌னித‌ர்க‌ள் உல‌கின் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் சென்ற‌ன‌ர். நாக‌ரிக‌ங்க‌ள் ப‌ல‌ உருவாகின‌. மொழிக‌ள் ஆர‌ம்பித்த‌ன‌.

எல்லா மொழிக்கும் அடிப்ப‌டை மொழி அர‌பு என்ப‌து என‌து வாத‌ம். உல‌கின் பெரும்பாலான‌ மொழிக‌ளுக்கிடையில் ப‌ல‌ சொற்க‌ள் தொட‌ர்பு உள்ள‌ன‌.

ப‌ல‌ மொழிக‌ளை ஆராய்ந்தால் இந்த‌ உண்மை தெரியும்.

த‌மிழ் மொழி என்ப‌து தொண்மையான‌ மொழி என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை.
ஆனால் த‌மிழ் மொழி உல‌கின் முத‌லாவ‌து மொழியல்ல‌ என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌ விட‌ய‌ம். அப்ப‌டியாயின் த‌மிழுக்கு முன் ம‌னித‌ன் பேசிய‌ மொழி என்ன‌ என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம்.

எது எப்ப‌டியிருப்பினும் உல‌கின் முத‌லாவ‌து ச‌ம‌ய‌ம் இஸ்லாம் என்ப‌தே என‌து உறுதியான‌ க‌ருத்து.

இஸ்லாம் என்றால் என்ன‌? க‌ட‌வுள் ஒருவ‌ன் என‌ ஏற்ப‌தும் அந்த‌ இறைவ‌னை ம‌ட்டும் வ‌ண‌ங்க‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே முத‌ல் ம‌னித‌னின் இஸ்லாமாக‌ இருந்த‌து.

பின்ன‌ர் ம‌னித‌ நாக‌ரிக‌ வ‌ள‌ர்ச்சிக்கேற்ப‌ இஸ்லாத்தின் போத‌னைக‌ள், ஆலோச‌னைக‌ள், புத்திம‌திக‌ள், ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ள் என்ப‌ன‌ கால‌த்துக்கு கால‌ம் முஸ்லிம் இறை தீர்க்க‌ த‌ரிசிக‌ளால் ம‌னித‌ர்க‌ளுக்கு சொல்ல‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. ஆத‌ம், சேது, ராம‌ன் என்ற‌ ர‌ஹ்மான், துல்கிப்ல் என்ற‌ புத்த‌ர், எப்ர‌ஹாம், நோவோ என்ற‌ நூஹ், மோசே, யேசு நாத‌ர் என‌ இவ‌ர்க‌ள் இறைவ‌ன் தூத‌ர்க‌ளாகும். இவ‌ர்க‌ளில் இறுதியான‌வ‌ர் முஹ‌ம்ம‌து ந‌பிக‌ள் நாய‌க‌ம் (ச‌ல்).
இதைத்தான் நான் சொல்கிறேன்.

ஆக‌வே ந‌ம‌க்குள் மொழிச்ச‌ண்டை, ம‌த‌ச்ச‌ண்டை வேண்டாம். ம‌னித‌ர்க‌ள் நாம் அனைவ‌ரும் ஒரு பெற்றோருக்கு பிற‌ந்த‌வ‌ர்க‌ளே.

ப‌ல‌ முஸ்லிம்க‌ளும் முஸ்லிம் அல்லாதோரும் இஸ்லாம் என்ப‌து 1400 வ‌ருட‌ங்க‌ள் முன் தோன்றிய‌து என்ற‌ ம‌ட‌மையிலேயே என் க‌ருத்துக்க‌ளை ம‌றுக்கின்ற‌ன‌ர்.
எப்ர‌ஹாம் என்ற‌ இப்ராகீம் 5000 வ‌ருட‌ங்க‌ள் முன் வாழ்ந்த‌வ‌ர். இவ‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என‌ குர்ஆன் தெளிவாக‌ குறிப்பிடுகிற‌து. இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் பூர்வீக‌த்தை ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்குள் ம‌ட்டுப்ப‌டுத்துவ‌து அறிவீன‌மாகும். உல‌கின் முத‌ல் ம‌னித‌னும் முத‌ல் முஸ்லிமுமான‌ ஆத‌ம் முத‌ல் ந‌ம‌து பூர்வீக‌ம் பார்க்க‌ப்ப‌ட‌ வேண்டும்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

வரலாற்று மாணவன் என்ற அடிப்படையில் வரலாற்றுக்கு முற்பட்ட அல்லது சற்று பிற்பட்ட கால வரலாற்றினை எண்ணிறந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். தமது கருத்துக்கள் சம்பந்தமாக அவரகள் யாரும் யாருடனும் மோதவில்லை. ஏனெனில் எந்த வரலாறாக இருந்தாலும் அது மேலும் ஆய்வுக்குரியது. கூறப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது. இராமன் இராவணன் ஆகியோர் சம்பந்தமாக ஆய்வினை நடத்த வேண்டியவரகள் இந்துக்களதான். அவரகள் இருவரைப் பற்றியும் இந்து இதிகாசங்களில்த்தான் மிக அதிகம் விளக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முபாறக் மௌலவி அவரகளை என்ன தூண்டியது என்பதைப் பற்றியும் அதை காரணமின்றி எதிர்ப்பதற்கு ரஸ்மின் MSc அவரகளை என்ன தூண்டிற்று என்பதையும் அறிய Jaffna Muslim வாசகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கினறார்கள்.

When I write this, Tears come out. Mentioning someone as Nabi(Raman= Rahman= Nabi) without any evidence from Quran & Sunnah, is regrettable. The names Nuh, Ibraheem are not fro Arabic. These statements are not uniting societies, rather, making Fithnah in our religion. A person, leader of Ulama Party, An Aalim, should never, ever make that mistake. Sh.Mubarak- you need to make Thawba at Allah(swt) and make an apology at the readers. May Allah guide all of us!

புத்தர் ஒரு நபி என்ற முபாரக் மெளலவியின் கருத்து குறித்து அவர் ஏற்கனவே விசாரிக்க பட்டார் அவர் அதனை சில ஆதார நுணுக்கங்களுடனே குறிப்பிட்டிருந்தார் ஆய்வு என்ற வகையில் அவரின் கருத்துக்களை ஒரேயடியாக புறந்தள்ள முடியாது கிட்டத்தட்ட 124000 நபிமார்களில் நாம் பெயறறிந்தது எத்தனை பேர்? அவரின் ஆய்வுக்கு நாம் இடமளிப்பதே சிறந்தது

முபாரக் அவர்களே, அரசியலுக்காக மார்க்கத்தை விற்க முனைய வேண்டாம். அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாவீர். உங்களை மௌலவி என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படுகின்றேன்.

Post a comment