Header Ads



ரவுடித்தனம் செய்த மேர்வினின் மகன் கைது செய்யப்படலாம் - பொலிஸார் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலிக சில்வாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது நண்பர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது தந்தையின் தேர்தல் பிரச்சாரத்துக்காக நண்பரிடம் மாலிக சில்வா பணம் கோரிய நிலையில் இதன்போது அவரும் சுவரொட்டிகளை அச்சிட்டு தர சிறிய தொகை பணத்துக்கு இணங்கியுள்ளார் என தெரியவருகிறது.

எனினும் ரீ-சேர்ட்டுகளுக்காக ஒரு லட்சம் ரூபா அவசியம் என்று மாலிக சில்வா நண்பரிடம் கோரியுள்ளார்.

இதனை தம்மால் தரமுடியாது என்று நண்பர் கூறிவிட்டு மாலக சில்வாவை படிப்படியாக தவிர்க்க முயந்சித்தபோது மாலிக சில்வா தமது பேஸ்புக்கில் தமது நண்பரை காணவில்லை என்ற பதிவை செய்துள்ளார்.

இதனை அறிந்த மாலக சில்வாவின் நணப்ர் குறித்த பதிவை அக்ற்றி விடுமாறு கோரியபோது மாலிக சில்வா அதனை அகற்ற முடியாது என்று கூறி நண்பருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கடுவெல நீதிமன்றத்தில் நேற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து நண்பருக்கும் அவருக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலை செவிமடுத்த பின்னர் மாலக சில்வாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.