Header Ads



வெளிநாடுகளில் சிக்கியுள்ள மக்களை அழைத்துவருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சம்பிக


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள உழைக்கும் மக்களை அழைத்துவருவதற் காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் , அவர்கள் அனைவரையும் நாட்டுக்குள் அழைத்துவரும் வரையில் நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினரால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கலந்துகொண்ட சம்பிக்க தெரிவித்ததாவது,

அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் எம்நாட்டு மக்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அரசாங்கம் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே நாங்கள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந் நாட்டைச் சேர்ந்த 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.

அவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இருக்கின்றது.

ஆனால் எம்.பிக்களின் பிள்ளைகளையும் , அவர்களின் சகாக்களின் பிள்ளைகளையும் அழைத்து வருவதற்கு மாத்திரம் விசேட விமானங்கள் அனுப்பட்டுள்ளன. இது பெரும் கவலைக்குறிய விடயமாகும்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை ஆளும் தரப்பினர் கொரோனா வைரஸ் வெடிகுண்டுகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்நாட்டைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களை நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டில் இருக்கும் நபர்களில் 2000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா கவும் , 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உடனடியாக அவர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராணுவ போராளிகள் , சுகாதார போரளிகள் , உழைக் கும் போராளிகள் என்ற பட்டத்தை வழங்கி ஊடகசந்திப்பு களை நடத்தி வந்தாலும். இன்று இராணுவத் தினரே பெரிதும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார வீரர்களுக்கு இன்னமும் முற்பணம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். அனைவரும் எமது போராட்டத்தில் கலந்துங் கொள்ளுங்கள் என்றே நாங்கள் மக்களுக்குத் தெரிவிக்கின்றோம்.

1 comment:

  1. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.