Header Ads



புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைப்புக்கு சூத்தரதாரி யார்...?

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைப்புக்கு முக்கிய சூத்திரதாரிகள் ராஜபக்ஷக்களது பெருமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர்களுக்குக் கீழ் உள்ளவர்களே என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரி வித்தார்.

இந்நிலையில், உடைக்கப்பட்டுள்ள புவனேகபாகு மன்னனுடைய அரச சபையை பார்வையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக் கிழமை -19- அங்குச் சென்றிருந்த போது ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டுமாயின் புவனேகபாகு மன்னனுடைய அரச சபையை உடைத்தவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு, குருணாகல் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதியை நிலை நாட்ட வேண்டும். ஒரு சதமேனும் பொது மக்களின் வரிப் பணத்தில் இல்லாமல் இதனைத் தகர்த்தவர்களது சொந்த செலவில் இந்த கட்டடம் புனரமைக்கப்பட வேண்டும்.

அத்தோடு, ராஜபக்ஷக்களது பெருமையையும் அதிகாரத் தையும் பயன்படுத்தி அவர்களுக்குக் கீழ் உள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

சீகியாவிற்கு சென்ற தமிழ் இளைஞரொருவர் அங்குள்ள சுவரில் கிறுக்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

அதனை அண்மித்த விகாரையொன்றில் வேறு இளைஞர் கள் சிலர் முறைதவறான புகைப்படம் எடுத்தமைக்காக அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இத்தனை வரலாற்றுச் சிறப்பும் முக்கியத்துவ மும் மிக்க இந்த கட்டடம் உடைக்கப்பட்டமைக்கு எதிராக எங்கு சட்டம் நடைமுறைப்பட்டுள்ளது ? நாட்டின் சட்டம் எங்குச்சென்றது ? பலமற்ற பொது மக்களுக்கு மாத்திரம் தான் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா ?

ஆட்சியாளர்களுக்கும் அவர்களது சேவையாளர்களும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படத் தேவையில்லையா ?

எனவே நகரசபை முதல்வர் உடனடியாக பதவி விலகி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். தொல்பொருளில் திணைக்களமும் செயலற்றுப் போயுள்ளது.

தற்போது தொல்பொருளில் சட்டம் நடைமுறைப்படுத்தப் படாமைக்கானகாரணம் என்ன ? ராஜபக்ஷக்களின் பலத் தின் கீழ் இருப்பவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.