Header Ads



தூதரக பணியாளர்களை பணயக்கைதிகளாக, பிடித்த இலங்கை பெண்கள் - ஜோர்தானில் நடந்தது என்ன..?


ஜோர்தானிலுள்ள இலங்கை தொழிலாளர்களால் பணயக்கைதிகளாக பிடித்த இலங்கை தூதர பணியாளர்களை மீட்பதற்காக ஜோர்தானிய பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை திரும்பும் தொழிலாளர்களே தூதரக பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோர்தான் தலைநகரில் உள்ள தொழிற்சாலையொன்றின் விடுதியொன்றுக்குள் மூன்று தூதரகபணியாளர்களை இலங்கையை சேர்ந்த பெண் பணியாளர்கள் பணயக்கைதிகளாக பிடித்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் தொழிலாளர்கள் தங்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கராக் என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக தூதரகத்தின் பணியாளர்களை இலங்கை தொழிலாளர்கள் ஐந்து மணித்தியாலத்துக்கு மேல் பணயக்கைதிகளாக பிடித்தனர் என தகவல்வல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக வேலைவாய்ப்பை இழந்த இலங்கை தொழிலாளர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் தொழிலாளர்கள் மூன்று தூதரக பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடித்திருப்பதையும் கடந்த சில தினங்களாக தாங்கள் உண்ணும் உணவை அவர்களுக்கு வழங்க முற்படுவதையும் காண்பிக்கும் வீடியோவொன்று வெளியாகியுள்ளது.

1 comment:

Powered by Blogger.