July 31, 2020

ஒரு நாடு, ஒரு சட்டத்தின்கீழ் செயற்பட வேண்டும் - இனம், மத, தனியான சட்டங்கள் தேவையில்லை

முஸ்லிம் சட்டம், காதி நீதிமன்றம் ஆகியவற்றை நீக்குவதை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டுள்ள கருத்தை கண்டிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் போன்ற சிங்களம் படித்த, சிங்கள மொழியை நன்றாக பயன்படுத்தும் மற்றும் சிங்கள மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒருவர் இப்படியான அடிப்படைவாத நிலைப்பாட்டை கொண்டிருப்பது குறித்து வருத்தப்படுகிறேன்.

ஒரு நாட்டில் ஒரு சட்டம் அமுலில் இருக்க வேண்டும். இன ரீதியாக தனித்தனியான சட்டங்களை உருவாக்கினால், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என தனித்தனியாக சட்டங்களை ஏற்படுத்த நேரிடும்.

இறுதியில் இந்த தனிச் சட்டங்களை நடைமுறைப்படுத்த இன ரீதியாக தனிநாடுகள் உருவாகும் நிலைமைக்கு இது செல்லும்.

இதனால், இலங்கை நாடு என்ற வகையில் ஒரு நாடு ஒரு சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும். இனம் மற்றும் மத ரீதியன தனியான சட்டங்கள் தேவையில்லை எனவும் மொஹமட் முஸ்ஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

டேய் மாடு ...நாங்க சட்டத்த மதிக்கும் மக்கள்....
இஸ்லாமிய வரையறை இல்லண்ட காஃபிர் ஆ வாழும் டா நம் மக்கள்...
உணக்கென்ன நீ already ...

Neyum Ali sabriyum 1stku muslima? Islamda Allah rasula patri theriyuma modayane?

ஒரே சட்டம்தான் அமுலில் இருக்க வேண்டும் என்றால், முஸ்ஸம்மில் ஓர் முஸ்லிமாக இருப்பதால், அவர் இஸ்லாமிய சட்டத்தையே சிபாரிசு செய்திருக்க வேண்டும்.

இந்நாட்டில் வாழாத ஆங்கிலேயரின் சட்டத்தை இங்கு அமுல் நடத்துவதைவிட,  இந்நாட்டை நேசிக்கும், அதன் இறைமையை மதிக்கும், அதில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே வாழும் இஸ்லாமியரின் சட்டத்தை இங்கு அமுல் நடத்துமாறு கேட்பதில் ஓர் தார்மீக நியாயமும் உள்ளது.

அது, அனைவரையும் படைத்த இறைவனால், பெளத்த, ஹிந்துக்கள் உட்பட்ட அனைவரினதும் நன்மைகளுக்காகவே இறக்கி அருளப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் எதற்குத்தான் அதில் தீரவு இல்லை?

பெளத்தம் உயர்ந்த போதனைகளைக் கொண்ட ஓர் தத்துவார்த்தம் என்பதற்கப்பால் அதில் வெற்றிடமாகவுள்ள வாழ்வியல் சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் இருக்கின்றன. 

அவற்றைப் பயன்படுத்தி இந்நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அடங்கலான அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்க உதவக்கூடிய ஓர் சிறந்த முஸ்லிமாக அவர் இருப்பதையே நாம் விரும்புகின்றோம்.

Muzammil,, Do remove only Mulims related laws ? Hope You also indirectly wanted to remove "Kandiyan Law" Udrata Laws and Pahatharata Laws too.

If you are man of just... Openly say about those laws also.

iwen oru munafik iwen muslim illay.iwenudaye pechchay yaarum ketka waanam.

sariya sonnega. well done

common law ok 4U because..... etc.

இவ்ன் ஒரு செக்கு மாடு

கௌரவ தேசிய பட்டியல் அவர்களே ! நீர் சொல்வது உண்மை ஒரே சட்டம், ஆகச்சிறந்த சட்டம், அல்லாஹ்வின் மூலம் கிடைக்கப்பெற்ற சட்டம் மட்டும்தான் சிறந்தது மனித வாழ்க்கைக்கு
பொருளாதாரமா, குடும்பவியளா,ஆன்மீகமா,, மனிதனை நேசிக்கும் விடயமா, மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விடயமா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் குர்ஆனின் வழிகாட்டல்கள் உமக்கு முடியுமென்றால் உரத்துக்கூறும் குர்ஆனின் வழிகாட்டல்கள் இந்த நாட்டை சுபிச்சமாக்கும் என்று

Post a comment