July 20, 2020

கருணாவும், ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது; ஹரீஸ் உறுதி

-பாறுக் ஷிஹான்-

கருணாவும், ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்க கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தை வெல்லுவதற்காக கட்சியின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீனுடன் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் மாநாடு ஒன்றினை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்த பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது;

மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் அல்லாமல், கலவர பூமியாக மாற்றுவதற்கான முஸ்தீபுகள் தற்போது நடைபெறுகிறது.

கருணா அம்பாறைக்கு வந்த பிறகு முஸ்லிம்ககளை கேவலமாக பேசுவதும் வந்தேறு குடிகள் என்று மிருகத்தை விட கேவலமாக கூறிவருவதை கட்சியின் பிரதி தலைவர் என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச தரமுயத்தும் விடயத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுபோடுவதாக கூறியிருப்பதும் ஞானசார தேரரின் படையெடுப்பு என்பதும் வன்முறையை தூண்டுவதாகும். எனவே கல்முனை கருணாவின் அப்பன் வீட்டு சொத்தல்ல என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். கல்முனை விவகாரத்தில் முஸ்லிம் தலைவர்கள் கட்டி காத்த நகரம். எம்மை சிதைத்தால் முஸ்லிம்கள் மாவட்டத்தில் சிறுபான்மையாக்கபடலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன்தில் இணைந்த வடகிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருப்பது முஸ்லிம் மக்களை அக்கறை படாமல் பலவந்தமாக சதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரங்கேற்றிய விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

முஸ்லிம்களை அநாதையாக விடும் வேலைகளை தமிழ் தலைமைகள் செய்வதை தந்தை செல்வா இருந்திருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார். தராள மனதுடன் செயற்பட்ட தமிழ் தலைமைகள் மத்தியில் இப்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவது மன வேதனைக்குரியது.கருணாவும் ஞானசாரவும் கல்முனையை கலவர பூமியாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. ஐக்கியமாக இருக்கும் தமிழ் இ முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் பேசும் பேச்சுகளை நிறுத்த வேண்டும். இவ்வாறான இனவாதிகளின் ஆசைகளுக்கு இடமளிக்க கூடாது என தெரிவித்தார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஷுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீன் மற்றும் கல்முனை மாநகர சபை முதல்வர் ,பிரதி முதல்வர், உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட உறுப்பினர்கள் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

4 கருத்துரைகள்:

Mr.ஹரீஸ்,த.தே.கூட்டமைப்பின் கபட நாடகம் தெரியாமலா உமது தலைவன் ஹக்கீம் இவ்வளவு காலமும் அவர்களுடன் கள்ள உறவில் இருந்து வந்தார். இதனை அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவு உமதுஅரசியல் சாணாக்கியம் குருட்டுத் தன்மை உடையதாக இருந்துள்ளது.
அடுத்து, உமக்கு பத்திரிகையாளர் மாநாடு நடாத்த நல்ல தகுதியான தலைவன் கிடைக்கவில்லையா? ஒரு அரசியல் விபச்சாரி தான் கிடைத்தானா? இவன் ஏற்கனவே மறைந்த தேசியத் தலைவரால் வெளியேற்றப்பட்ட சகுனி.இவன் ஒரு தரித்திரம்.இவன் நின்ற பக்கம் வென்ற சரித்திரம் இதுவரை இல்லை.
இதுவெல்லாம் தெரியாத குட்டி பபாவாக இருந்து கொண்டு வீர வசனம் பேச வந்துவிட்டீர்.
அரசியலில் அரிவரி படிக்க எங்கள் ஊருக்கு ( மருதூர்) வாரும்.

கிழக்கில் குறிப்பாக கல்முனையிலும் மூதூரிலும் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இல்லை என்பது கவலை தருகிறது. தேர்தலின் பின்னர் முறுகல் நிலை உருவாகக்கூடிய சூழல் உள்ளது. முஸ்லிம் அலகுகளின் தலைவிதியை தமிழரோ தமிழ் அலகுகளின் தலைவிதியை முஸ்லிம்களோ எழுதுகிற வாய்ப்புகள் இல்லை. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தீர்வு எதுவந்தாலும் வடகிழக்கு மாகாணம் இணைந்த முஸ்லிம் அலகுகள் இணைந்த தமிழ் அலகுகள் என்கிற அடிப்படையில் அணுகப்படவேண்டும் தேர்தல் அமைதியாக நடைபெறவேண்டும்மென பிரார்த்திக்கிறேன்.

Hi Harees You are right. I agree with you, but!!!!
Can you please inform the public, how much you paid Segu Izzadeen to have a media conference with you.

கல்முனை என்பதும் கல்முனைக்குடி என்பதும் இரு வெவ்வேறு தனித்தனிக் கிராமங்களாகும்.கல்முனையின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியும் வடக்கு எல்லை தாளவெட்டுவான் வீதியும் ஆகும். அதாவது கல்முனையின் தென்எல்லை கல்முனைக்குடியும் வடஎல்லை பாண்டிருப்பு கிராமமுமாகும். அதேபோல் கல்முனைக்குடியின் தெற்கு எல்லை கல்முனை ஸாகிராக் கல்லூரி வீதியும் வடக்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியுமாகும். அதாவது கல்முனைக்குடியின் தென்எல்லை சாய்ந்தமருது கிராமமும் வட எல்லை கல்முனையும் ஆகும்.
கல்முனையையும், கல்முனைக்குடியையும் பிரிக்கும் எல்லையாகச் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில்வீதி விளங்கிற்று, மேலும் கொழும்பு – இரட்மலான-வெல்லவாய – மட்டக்களப்பு (C.R.W.B Road) வீதியில் கல்முனை ஊர் ஆரம்பிப்பதைக் குறிக்கும் ‘கல்முனை’ பெயர்ப்பலகை பொதுமராமத்து இலாகாவினால் (Public works Department) பிரதான வீதியில் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால்தான் நிர்மாணிக்கப் பெற்றிருந்தது.
கல்முனைக்குடியைக் கல்முனையோடு பிணைத்து 1897இல் கல்முனை என்ற பெயரில் “சனிற்றறி” சபை (Sanitary Board) நிறுவப்பட்டது என்பதினாலோ அல்லது பின்னாளில் இது 1946ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க பட்டினசபைகள் சட்டத்தின் கீழ் 1947 இல் கல்முனை என்ற அதே பெயரில் பட்டினசபை (Town Council) ஆக்கப்பட்டது என்பதினாலோ இரு வெவ்வேறு தனித்தனிக் கிராமங்களான கல்முனையும், கல்முனைக்குடியும் ஒரே தனிக்கிராமமாகி விட முடியாது.

Post a comment