Header Ads



சம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்

இலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித்துள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த வங்கியில் இருந்து திரும்பபெறும் பணத்தை இஸ்லாமிய வங்கி ஒன்றில் வைப்பு செய்யுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியின் கிளை ஒன்றுக்கு சென்றிருந்த முஸ்லிம் பெண்ணொருவரின் புர்காவை கழற்றுமாறு அதன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உலமா சபை இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

உலமா சபையின் இந்த அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் எனவும், அடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ரதன தேரர் இதனை கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தெஹிவளையில் உள்ள தனியார் வங்கியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டிருந்த சிலர், அந்த வங்கி சிங்கள பௌத்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறியிருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த கருத்துக்களை அடுத்து, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட வங்கியில் இருக்கும் தனது அலுவலகத்தின் வைப்பு பணத்தை அனைத்து இனங்களும் பயன்படுத்தக் கூடிய வங்கி ஒன்றில் வைப்புச் செய்யுமாறு தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மங்கள சமரவீர அதில் குறிப்பிட்டிருந்தார்.

5 comments:

  1. அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட இந்த பெளத்த தீவிரவாதி மீண்டும் இனவாதத்தை தூண்டி இலாபம் அடைய பார்க்கின்றான்

    ReplyDelete
  2. WHAT IS THE SOURCE FOR HIS ALLEGATION?

    ReplyDelete
  3. எமது அழகிய நாடாம் இலங்கைத் திருநாட்டில் ஜனநாயகம் ஓங்கி சமாதானம் தளைத்து நாட்டில் ஒற்றுமையும் மத சௌயஜன்னியமும் தளைக்க வேண்டுமாக இருந்தால் அதுரலிய ரத்ன தேரரைப் போன்ற மத மொழி இன வெறி கொண்ட்வரகள் கட்டுப்படுத்தப்பட்டால் நிச்சயம் மேற்கூறிய குறிக்கோள்களை நாம் அடைய முடியும்.

    ReplyDelete
  4. If jamyathul ulama requested the Muslims who are maintaining AC with Sampath bank to withdraw their monym and close their Ac for the alleged incident no-one else can halt to do it as this is our society related matter.we have every right to decide our personal issues that not effect othrds right

    ReplyDelete

Powered by Blogger.