Header Ads



தந்தையாகப்போகும் நாமல் - வெளியான புகைப்படம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்ட மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, விரைவில் பிள்ளை ஒன்றுக்கு தந்தையாக உள்ளதாக தெரியவருகிறது.

அவரது மனைவி லிமினி வீரதுங்க தனது முதலாவது பிள்ளை பெற தயாராகி வருகிறார். நாமல் ராஜபக்சவும் அவரது மனைவியும் காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச தனது இளைய சகோதரர்கள் திருமணம் செய்துக்கொண்ட பின்னர்,இறுதியாக கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

அவரது இளைய சகோதரான ரோஹித்த ராஜபக்ச ஏற்கனவே ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. நாமல், யோஷித்த மற்றும் ரோஹித்த ஆகியோரில் ரோஹித்த ராஜபக்சவே முதலில் திருமணம் செய்துக்கொண்டார்.

1 comment:

Powered by Blogger.