Header Ads



84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியைரிடமிருந்து, கொவிட் ஒழிப்புக்கு 2 இலட்ச ரூபாய்கள்…


புத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க ஓய்வுபெற்ற ஆசிரியை இரண்டு இலட்சம் ரூபாய்களை கொவிட் நிதியத்திற்கு ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். 

பொதுஜன முன்னணியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (06) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாதம்பை தனிவெல்லே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது. 

ஜனாதிபதி அவர்களே, 

“சட்டம், நீதி, தர்மத்தை பாதுகாக்கின்ற அரசாங்கம் – தன்னிறைவடைந்த நாடொன்றை எமக்கு கையளியுங்கள்” 

அவர் ஐயாயிரம் ரூபாய் தாள் காசுகளை ஒன்று சேர்த்து வழங்கிய இரண்டு இலட்சம் ரூபாவை சுற்றிய கடதாசியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.06

1 comment:

  1. திருமதி. மாரசிங்க அம்மணீ அவரகள் உண்மையைத்தான் எழுதியுள்ளார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. தேர்தலுக்கு முகம் கொடுக்கும் சகல அரசியல் தலைவரகளும் அந்தந்தக் காலங்களில் இதைத்தான் சொன்னார்கள். சொல்கின்றார்கள். சொல்லப் போகின்றார்கள். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை.. மாரசிங்க அம்மணி அவரகளுடைய எண்ணம் நிறைவேறவேண்டுமாக இருந்தால் நாட்டில் உண்மை ஜனநாயகம் மலர வேண்டும். வேறு எதுவும் எவராலும் செய்யப்பட வேண்டியதில்லை. அதை மட்டும் செய்யுங்கள்.

    Madam Marasinghe has written the truth. But nothing like that is going to happen. All the political leaders facing the election have said the same in their respective times. But nothing was going to happen. If Marasinghe's wish is to be fulfilled, true democracy should flourish in the country. Nothing else needs to be done. Just do only that.

    ReplyDelete

Powered by Blogger.