Header Ads



இலங்கையில் போலி கிரிக்கெட்டை நடத்திய 3 பேர் இந்தியாவில் கைது

இந்திய மொஹாலியில் வைத்து போலியாக இலங்கையின் ஊவா லீக் என்றுக்கூறி கிரிக்கட்போட்டிகளை நடத்தியதாக கூறப்படும், அத்துடன் இந்திய கிரிக்கட் சபையினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வந்த, ரவீந்தர் டண்டிவால் என்பவர் உட்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்

இவர் ஏற்கனவே சர்வதேச டென்னிஸ் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இந்த போலி கிரிக்கட் லீக் போட்டி சண்டிகாருக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் கடந்த ஜூன் இறுதி நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில மொஹாலியில் விளையாடப்பட்ட கிரிக்கட் போட்டியை இலங்கையில் இருந்து யூடியூப் மூலம் ஒளிபரப்புவதாக காட்டி பொய் கூறியதாக டண்டிவால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் குழு ஒன்று நாளை மொஹாலிக்கு சென்று காவல்துறையினருடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவுள்ளது.

இதேவேளை ஊவா லீக் என்ற சொல்லப்பட்டு விளையாடப்பட்ட மொஹாலி போட்டிக்காக சிறிய அணிகளின் வீரர்கள் இணைந்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா முதல் 10 ஆயிரம் ரூபா வரை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போலியான போட்டிகள் மொஹாலியில் இருந்து யூடியூப் மூலம் ஒளிபரப்ப்பட்ட போது அதவறுதலாக புகைப்படக்ககருவியில் வயல்களில் விவசாயிகள் வேலை செய்துக்கொண்டிருந்த காட்சி காட்டப்பட்ட நிலையிலேயே அந்த போட்டி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை டண்டிவால் இதற்கு முன்னாள் ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற இடங்களில் கிரிக்கட் போட்டிகளை ஏற்பாடு செய்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில வருடங்களுக்கு முன்னர் இந்திய வீரர்களை வைத்து ஒரு லீக் போட்டியை நடத்தவேணடும் என்று அவர் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் கோரியபோதும் அதற்கு இந்திய கிரிக்கட் சபை உடன்படவில்லை என்று சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.