Header Ads



3 முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையே கடும் போட்டி


இம் முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கிண்ணியாவில் உள்ள மூன்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மும் முனை போட்டி நிலவி வருவதனை அறியமுடிகிறது.

திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கிண்ணியாவில் உள்ள மூன்று முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப்,எம்.எஸ்.தௌபீக்,இம்ரான் மஹ்ரூப் ஆகியோர்கள் இம் முறையும் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜீத் அணியில் களமிறங்கியுள்ளதுடன் தீவிர பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு இது ஒருபுறமிருக்க திருகோணமலை மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 189 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்,சுயேட்சை குழுக்கள் ஊடாக போட்டியிடுகின்றனர் இதில் 13 அரசியற் கட்சிகளும் 14 சுயேற்சைக் குழுக்கள் மூலமாக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜனபெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்களாக நாடாளுமன்றத்துக்கு தெரியாவாகக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. முஸ்லீம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அவர்கள் இந்த முறை எங்கள் முஸ்லிம் வாக்குகலை சஜித் பிரேமதாசாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள்.
    புதிய அரசாங்கம் உருவாக்குவதற்கான ஒரே வழி, முஸ்லிம்கள் "பங்குதாரர்களாக" மாற வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்கள் எங்கள் வாக்குகளை SLPP / POTTUWA ALLIANCE, விடம் அளிப்பதன் மூலம் ரவூப் ஹக்கீம் அவரது குரலை மூடுவதாகும். யஹபலானா அரசாங்கத்தில் 21 முஸ்லிம் எம்.பி.கள் செய்த மோசடி பற்றி
    "தி முஸ்லீம் குரல்" மேற்கொண்ட அரசியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் சமகி பலவேகயாவால் இரண்டு இடங்களைப் பெற முடியாது. மறைந்த M.E.H Maharoofஇன் மகள் மற்றும் மகனான ஹலீனா மஹாரூப் மற்றும் இம்ரான் மஹாரூஃப் இடையே கடுமையான போட்டி உள்ளது. எஹிதர் ஹஜியார் / அலி குடும்பம் / மஹாரூப் குடும்ப வாக்குகள் UNP மற்றும் சமகி பலவேகயா இடையே பிரிக்கப்பட உள்ளன. எனவே சமகி பலவேகயா அநேகமாக ஒரு இருக்கை (MP) பெறுவார். யு.என்.பி ஒரு இருண்ட குதிரையாக இருந்து ஒரு இருக்கை (MP) பெறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இடத்தையும், எஸ்.எல்.பி.பி அல்லது ஜே.வி.பி ஒரு இடத்தையும் பெறலாம். கின்னியா, சின்னா கின்னியா, முலிபதஹான், தம்பலகாமம், முத்தூர், தோப்பூர், சின்ன தோப்பூர், மாஞ்சோலை, காக்கமுனை, காந்தலே, புல்மோடாய், திருகோணமலை நகரம், காசிம் நகர், குச்செவேலி, நிலவேலி, மட்கொ முஸ்லீம்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.