Header Ads



3 முஸ்லிம் எம்.பி.கள் பதக்கம் பெற்றனர்


manthri இணையத்தளத்தின் ஊடாக இம்மாத ஆரம்பத்தில் 8 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரப்படுத்தல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், சபை அமர்வுகளில் பங்கேற்றல் மற்றும் வருகைத்தரல் மாவட்ட நிலை என்பவற்றிற்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன்போது, மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.

225 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் 3 பதக்கங்களை பெற்றிருந்தார். 
இவர்களுக்கான பதக்கங்கள் பதிவுத் தபால் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக manthri.lk இணையத்தள அதிகாரியொருவர் குறிப்பிட்டார். 

இதன்போது, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கப்பெற்றிருந்தது. அத்துடன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் ஆகியோரும் தலா ஒவ்வொறு பதக்கங்களை பெற்றிருந்தனர். 

மூன்று பதக்கங்களை வென்ற கயந்த 

சிறந்த பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்கேற்றமைக்கான பதக்கம், சிறந்த வருகை, காலி மாவட்டத்தில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறந்த செயற்திறன் உள்ளிட்ட மூன்று பதக்கங்களை முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். 

முஜிபுர் ரஹ்மான்

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான முஜிபுர் ரஹ்மான்  manthri.lk தேசிய மட்டத்தில் 23 ஆம் இடத்தை பெற்றுள்ள சிறப்பான பாராளுமன்ற செயற் திறணுக்கான பதக்கத்தையும் சிறந்த வருகைக்கான பதக்கத்தையும் பெற்றிருந்தார். மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்திற்கான செயற்திறன் மிக்க பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். 96 வீத பாராளுமன்ற வருகையையும் அவர் கொண்டுள்ளார். 14 தலைப்புகளில் 235 தடவைகள் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்காற்றியிருக்கின்றார் முஜிபுர் ரஹ்மான். முஸ்லிம் உறுப்பினர்களில் இவர் மாத்திரமே முதல் 25 இடத்திற்குள் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இம்ரான் மஹ்ரூப் 

2015 இல் இளம் உறுப்பினராக முதன்முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இம்ரான் மஹ்ரூபுக்கு சிறந்த வருகைக்கான பதக்கம் கிடைக்கப்பெற்றிருந்தது. 93 வீதம் பாராளுமன்ற வருகையை கொண்டிருந்தமைக்கே அவருக்கு இந்த பதக்கம் கிடைக்கப்பெற்றது. 15 பாராளுமன்ற உறுப்பினர்களே 90 வீதத்திற்கும் அதிகமான பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கபீர் ஹாஸிம்

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஸிம் 7 ஆவது பாராளுமன்றத்தில் கேகாலை மாவட்டம் சார்பில் சிறந்த செயற்பாட்டை பாராளுமன்றில் வெளிப்படுத்தியமைக்கான விருதை பெற்றிருந்தார். 

முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் மற்றும் கபீர் ஹாஸிம் தவிர்ந்த ஏனைய 18 முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பதக்கம் வழங்களுக்கு தகுதி பெற்றிருக்கவில்லை. 

Manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் இணையத்தளமாகும். பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்த பொது மக்கள் மீதுள்ள அவர்களது கடமையை எந்தளவு சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள் என்பதை அவதானித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் ஒரு பொறிமுறையாக செயற்படும். 

பயன்திறன் மிக்க விதத்தில் பாராளுமன்ற நேரத்தை செலவிடுதல், வெளிநாட்டு கொள்கை தொடர்பான செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமை, நல்லிணக்கம் உட்பட்ட 42 அம்சங்களை உட்படுத்தும் Manthri.lk முன்னேடுப்பு, பரிபூரணமானதொரு கட்டமைப்பின் கீழ் பக்கசார்பின்றி செயற்பட்டவாறு பாபராளுன்ற உறுப்பினர்களுடைய செயற்பாடுகளை மதிப்பீடு செய்தவண்ணம் தரப்படுத்தல்களை மேற்கொள்கிறது. 

Manthri.lk இணையத்தயளம் கொழும்பை ஸ்தலமாகக் கொண்டு இயங்கி வரும் அறிவுஜீவிகள் குழுமமொன்றாகிய வெரிடே ரிசேர்ச் ஆய்வு அமைப்பின் ஒரு உருவாக்கம் ஆகும். பொருளாதார, அரசியல், சட்டத்துறை, ஊடகம் போன்ற அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வெரிடே ரிசேர்ச் அமைப்பின் Manthri.lk முன்னெடுப்பிற்காக இணையத்தள மேம்பாடு உட்பட்ட பல்வேறுபட்ட துறைசார் செயற்பாடகளில் ஈடுபட்டு வரும் சர்வதேச புகழ்பெற்ற ஸாபேரியன் அமைப்பின் ஒத்துழைப்பையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.