Header Ads



கொரோனா தொற்றினால் 2024 வரை, விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பாது


இதன் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்பட்டது.

ஆனாலும் சிற்சில நாடுகள் சுகாதார விதிமுறைகளுக்கமைய விமானப் பயணத்தை ஆரம்பித்திருப்பினும் இலங்கை போன்ற சில நாடுகள் விமான நிலையத்தை திறப்பதில் தாமதம் காட்டிவருகின்றன.

இந்நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய கணிப்பின்படி கொரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது.

ஏப்ரல் மாதக் கணிப்பில் 46% மட்டுமே நடப்பாண்டு விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.