July 04, 2020

2019 ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் நிம்ம‌தியாக‌, சொர்க்க‌ வாழ்வு வாழ்ந்த‌தா..?

க‌ட‌ந்த‌ ஆட்சியை விட,‌ ஜ‌னாதிப‌தியின் இந்த‌ ஆட்சியில் முஸ்லிம்க‌ள் மிக‌வும் நிம்ம‌தியாக‌ இருப்ப‌தை கெடுப்ப‌த‌ற்கென்றே முன்னாள் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ குப்பைக‌ள் முய‌ல்கின்ற‌ன‌ என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி குறிப்பிட்டார்.

க‌ல்முனையில் ந‌டைபெற்ற‌ தேர்த‌ல் பிர‌சார‌ க‌ல‌ந்துரையாட‌லின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,   

முஸ்லிம்க‌ள் ப‌ல‌ சோத‌னைக‌ளையும் வேத‌னைக‌ளையும் எதிர் நோக்கியிருப்ப‌தாக‌ முஸ்லிம்க‌ளின் தேர்த‌ல் பிர‌ச்சார‌ மேடைக‌ளில் சொல்கிறார்க‌ள். இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ளுக்கு விமோச‌ன‌ம் கிடைக்க‌  ப‌ழைய‌ பாராளும‌ன்ற‌ குப்பைக‌ளை மீண்டும் தெரிவுசெய்யட்டாம் என‌ கூறி முஸ்லிம்க‌ளை மீண்டும் ஏமாற்ற‌ முனைகிறார்க‌ள்.

இந்த‌ ஆட்சி வ‌ந்து சுமார் 8 மாத‌ங்க‌ள்தான் ஆகிற‌து.  இந்த‌ கால‌த்துள்தான் முஸ்லிம்க‌ளுக்கு சோத‌னைக‌ளும் வேத‌னைக‌ளும் ஆர‌ம்பித்துள்ள‌ன‌வா?

 அப்ப‌டியாயின் 2019 ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் நிம்ம‌தியாக‌, சொர்க்க‌ வாழ்வு வாழ்ந்த‌தா?

முஸ்லிம்க‌ளுக்கு க‌ஷ்ட‌ம் என்றும் ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்தால் நிம்ம‌தி கிடைக்கும் என்று  சொல்லித்தானே 2015ல் 99 வீத‌ முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்டு ர‌ணில், மைத்திரி, ச‌ஜித் பொல்லாட்சியை  கொண்டு வ‌ந்தார்க‌ள். அந்த‌ நால‌ரை வ‌ருட‌மும் முஸ்லிம்க‌ள் ஒரு போதும் அனுப‌விக்காத‌ கொடுமையை அனுப‌வித்த‌து ஞாப‌க‌ம் இல்லையா?

முஸ்லிம்க‌ளுக்கு இந்த‌ எம் பீக்க‌ளால் நிம்ம‌தியை பெற்றுக்கொடுக்க‌ முடிந்த‌தா? அனைத்து முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளும் அர‌சுக்கு முட்டுக்கொடுத்தும் ஒரு உரிமையைத்தானும் பெற்றுக்கொடுத்தார்க‌ளா? குறைந்த‌து இவ‌ர்க‌ளின் வெற்றிக்காக‌ இவ‌ர்க‌ள் மேடைக‌ளில் துஆ ஓதிய‌ ஒரு மௌல‌விக்காவ‌து மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் பெற்றுக்கொடுத்தார்க‌ளா?

அர‌ச‌ ஊழிய‌ரான‌ முஸ்லிம் பெண்க‌ள் அபாயா அநிய‌க்கூடாது என்ற‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்த‌ ஆட்சியாள‌ர்க‌ள் யார்? முக‌ம் மூடும் பெண்க‌ள் வ‌ர‌க்கூடாது என‌ முஸ்லிம் பெண் போன்ற‌ ப‌ட‌த்தை அர‌ச‌ ப‌ஸ்க‌ளிலும் ஒட்டிய‌ ஆட்சியாள‌ர் யார்? 
ச‌ம‌ய‌ ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌த்துக்கான‌ வ‌ர்த்த‌மாணி அறிவித்த‌லை ர‌த்து செய்த‌து யார்?
குர்ஆனை திருத்த‌ வேண்டும் என‌ சொன்ன‌ முட்டாள் அமைச்ச‌ரை ஆட்சிபீட‌ம் ஏற்றிய‌வ‌ர்க‌ள் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அல்ல‌வா.

பொலிஸ், ராணுவ‌ம், ஆட்சி, அதிகார‌ம் அனைத்தும் த‌ம் கையில் இருந்தும் அம்பாரை ப‌ள்ளி,  திக‌ன‌, க‌ண்டி என‌ தாக்க‌ப்ப‌ட்ட‌ போது பார்த்திருந்த‌ ஆட்சியாள‌ர்களும் பொன்ன‌த்த‌ன‌மாக‌ இருந்த‌ முஸ்லிம் எம்பீக்க‌ளும் மீண்டும் தேவையா? 

ஒரு சில‌ முஸ்லிம் முட்டாள்க‌ள் செய்த‌ த‌வ‌றுக்காக‌ முழு முஸ்லிம்க‌ளையும் தாக்கிய‌து யாரின் ஆட்சியில்?

அப்பாவி தவ்ஹீத் ஜ‌மாஅத் பெரியோர்க‌ள், ஜ‌மாஅதே இஸ்லாமி த‌லைவ‌ர் போன்றோரை சிறையில் அடைத்த‌து யார்? கோட்டாவின் ஆட்சியா? இந்த‌ முன்னாள் முட்டாள்க‌ள் கொண்டு வ‌ந்த‌ ஆட்சியா?

நாம் நீண்ட‌ கால‌மாக‌ த‌வ்ஹீத் , த‌ப்லீக், ஜ‌மாஅதே இஸ்லாமிக‌ளுக்கு சொல்லி வ‌ருகிறோம். ச‌மூக‌த்தை தெளிவாக‌ ஏமாற்றும் முஸ்லிம் ப‌ண‌க்கார‌ க‌ட்சிக‌ளை விடுத்து நாட்டில் அனைத்து இன‌ ம‌க்க‌ளுக்குமிடையில் ச‌மாதான‌ பால‌த்தை உருவாக்கி முஸ்லிம்க‌ளின் உரிமைக்குர‌லாக‌வும் செய‌ற்ப‌டும் இஸ்லாத்தை க‌ற்றோர் த‌லைமையிலான‌ உல‌மா க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்துங்க‌ள் என்று. கேட்க‌வில்லை. க‌டைசியில் க‌ட‌ந்த‌ ஆட்சியில் இவ‌ர்க‌ளின் விடுத‌லைக்காக‌ துணிந்து குர‌ல் எழுப்பிய‌து எம‌து உல‌மா க‌ட்சியே. 

ஜ‌னாதிப‌தி கோட்டாவின் இந்த‌ ஆட்சிக்கால‌த்துள் முஸ்லிம்க‌ள் 99 வீத‌ம் நிம்ம‌தியாக‌ வாழ்கிறார்க‌ள். இத‌னை கெடுப்ப‌த‌ற்கென்றே முஸ்லிம்க‌ளை உசார் ம‌டைய‌ர்க‌ளாக்க‌ முய‌லும் முன்னாள் பாராளும‌ன்ற‌ முஸ்லிம் குப்பைக‌ள் இன்ன‌மும் ந‌ம‌க்கு தேவையா?

முஸ்லிம் ச‌மூக‌ம் சிந்திக்க‌ வேண்டும். இனியாவ‌து அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ புதிய‌ க‌ட்சிக‌ளில் வ‌ரும் இளைஞ‌ர்க‌ளையும், நல்ல‌வ‌ர்க‌ளையும், தைரிய‌மாக‌ பேசும் க‌ட்சிக‌ளையும் ப‌ல‌ப்ப‌டுத்தி அவ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளிப்போம்.

அவ்வாறின்றி முஸ்லிம் ச‌மூக‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ளிட‌மிருந்து பிரித்து நாட்டில் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்த‌ முய‌லும் முன்னாள் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ குப்பைக‌ளை ஒதுக்குவ‌தே தொட‌ர்ந்தும் முஸ்லிம் ச‌மூக‌ம் இன்றிருப்ப‌து போன்ற‌ நிம்ம‌தியை பெறும் வ‌ழியாகும்.

2 கருத்துரைகள்:

இந்த ஆட்சிக்கு மிக சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி அவசியம் என்பதனை சாதாரண அரசியல் புரிந்தவர்களுக்கும் புரியும் நல்லவற்றைக்கூடச் செய்வதற்கு ஆமியைத்தான் பயன்படுத்துவர். எதிர்க்கட்சியாக JVP அமைந்தால் சிறப்பு.

சுற்றிச் சுற்றி அதே இடத்துக்கேயே வருகிறீர்கள்.  அதனால்தான், ஜனாஸா எரிப்பு பற்றி எதுவுமே பேச மாட்டீர்கள்.  இன்னொரு ஜனாஸா எரிக்கப்படும்வரை இதன் பாரதூரம் புரியாது.  உங்கள் பங்குக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய, உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி  ஏதாவது முயற்சி செய்யலாமே?

Post a comment