Header Ads



நாட்டில் இதுவரை 1917 பேர், கொரோனாவிலிருந்து பூரண குணமடைவு


கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து, வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை 1917 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, 885 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

எனினும் நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.