Header Ads



சவூதியில் மாத்திரம் கொரோனாவுக்கு 18 இலங்கையர்கள் மரணம்

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு காப்புறுதி இழப்பீடு வழங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபத்தின் ஊடாக கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில்  காப்புறுதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கோவிட்-19 கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு காப்புறுதி இழப்பீடாக சுமார் 5 இலட்சம் அல்லது 6 இலட்சம் ரூபா அடிப்படையில் பகிர்தளிக்கப்படவுள்ளது.

இவ்வாறு காப்புறுதி பதிவு செய்து வெளிநாட்டில் பணி புரியும் தொழிலாளர்கள் கோவிட் 19 கொரோனா தொற்று நோயால் பணி புரியும் போது உயிரிழந்தால் சுமார் 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். தற்போது அதற்காக சுமார் 20 பேரின் கோப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு  மார்ச் 16 ஆம் திகதிக்குப் பிறகு பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்ற வர்களுக்காக இந்த இழப்பீடு 6 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கத்தில் பதிவுசெய்த காலம் நிறை வடைந்து மீண்டும் புதுப்பிக்காமல் பணியாற்றி உயிரிழந்தவர்களுக்குக் காப்புறுதி இழப்பீடு வழங்கப்படமாட்டாது, அவர்களுக்காக பணியகத்தின் சிறப்பு நல நிதியத்தின் கீழ் தலா 3 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும்.

இந்த ஆண்டின் கடந்த 6 மாத காலத்துக்குள் பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற 40ஆயிரத்து 143 தொழிலாளர் களுக்கு இலவச காப்புறுதி தொகையை வழங்கு வதற்காக பணியகம் சுமார் 2கோடியே 63இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியுள்ளது.

இது தவிர உயிரிழந்த அனைவருக்கும் இறுதிச் சடங்குகளுக்காக சுமார் 40 ஆயிரம் அடிப்படையில் பகிர்ந்தளிக்கவுள்ளது. இதற்கு முன்னர் உயிரிழந்த வர்களின் இறுதிச் சடங்குகளுக்காக 30ஆயிரம் பகிர்ந்தளிக்கப்பட்டது .

ஆனால் தற்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களுக்காக சுமார் 10 ஆயிரம் ரூபாவை பகிர்ந்தளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் இது வரை சுமார் 40 வெளி நாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 37 பேர் மற்றும் பெண்கள் 3 பேர் அடங்குவர்.

இதில், சவூதி அரேபியாவில் 18 பேர், குவைத்தைச் சேர்ந்த 9 பேர், ஐக்கிய அரபு எமிரேட்டில் 8 பேர் , ஒமானில் 2 பேர், கத்தாரில் 2பேர், லெபனானில் ஒருவர் என்ற அடிப்படையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள் ளது.

No comments

Powered by Blogger.