Header Ads



சொத்து விபரங்களை வெளியிட்ட 17 அரசியல்வாதிகளில், ஒரேயொரு தமிழ் அரசியல்வாதி


தேர்தலில் நிற்பவர்கள் அனைவருமே தேர்தல் ஆணைக்குழுவிடம் சொத்துப் பிரகடனம் செய்ய வேண்டும்.

நாட்டின் பிரஜைகள் ஆணைக்குழுவிடம் பணங்கட்டி குறித்த வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனத்தின் பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பொது வெளியில் பகிரவோ, வேறு நபர்களிடம் அதைப் பற்றிச் சொல்லவோ முடியாது. ஒரு வேட்பாளரின் சொத்துப் பிரகடனத்தைப் பகிரங்கப்படுத்துவது தண்டணைக்குரிய குற்றமாகும்.

ஆனால் அரசியல்வாதிகளது சொத்து விபரங்கள் வாக்காளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இது உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு அத்தியாவசியமானதொன்று. அடிப்படைப் பொறுப்புக்கூறல் என்றும் கொள்ளலாம்.

அண்மைக்காலங்களில் அரசியல்வாதிகள் பகிரங்க சொத்துப் பிரகடனத்தைச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வந்திருக்கிறது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக சென்ற ஆண்டு பெப்ரவரி மாதம் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தாமாக முன்வந்து தம் சொத்து விபரங்களை பொது வெளியில் டிரான்ஸ்பேரன்சி இன்டர் நஷனலூடாக வெளியிட்டனர். அதில் எம். ஏ. சுமந்திரனும் ஒருவர்.

இந்த முன்மாதிரியான செயற்பாட்டைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 17 அரசியல்வாதிகள் தம் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே தமிழ் அரசியல்வாதி: எம். ஏ. சுமந்திரன். 

1 comment:

  1. சொத்து விபரங்களை மற்றவரகள் வெளியிடாமைக்குக் காரணம் ஒன்று அவரகளிடம் சொத்து இல்லை. இல்லாவிட்டால் அவரகளிடம் இருப்பது திருட்டுச் சொத்து.

    ReplyDelete

Powered by Blogger.