July 09, 2020

அடுத்த 10 ஆண்டுகளுக்கு கோட்டாபய - மஹிந்த அரசு பதவியில் இருக்கப்போவதை முஸ்லிம்கள் மறக்கக்கூடாது

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி, பிரதமரை மிக மோசமாக விமர்சித்து முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்கிய சில அரசியல் சக்திகள் முஸ்லிம் வாக்கு வங்கியை சூறையாடுவதற்கு தவறாக வழிநடத்தப்பட்டனர். அதன் மூலம் சமூகம் கைகளை சுட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொள்ள முடியாது என்பதை மனதில் பதித்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் தேசியக் கட்சிகளிலிருந்து விலகி நிற்பதால் எமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்க முடியாது. முஸ்லிம்கள் தனிமைப்படுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் பதவியில் இருக்கப் போவதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த ஆட்சியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எட்டு வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்து தேசியப் பட்டியல் மூலம் வழங்கப்படவுள்ள இரண்டு எம்.பி.க்களுடன் பத்து பேரும் தெரிவாவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக் கொண்டு தம்மால் எதனையும் சாதிக்க வியலாது. பெரும்பான்மை இனத்தை எமது நேச சக்திகளாக அரவணைத்துச் செயற்பட வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்து எட்டு மாதங்களில் ஒரு தடவையேனும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பேசியுள்ளாரா? இந்தநிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போது முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்கள் கூடுதல் பயனை அடைந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

2 கருத்துரைகள்:

நிச்சயமாக, உறுதியாக நாஙகளும் கௌரவ உவைஸ் ஹாஜி அவரகளுக்கு கூற விரும்புகினறோம். எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கும் ஏன் அதற்கு மேலும் பொது பெரமுன தலைமையிலான ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அதுவே எங்களுடைய ஆசையும் விருப்பமும். ஆனால் நீங்கள் சொல்வதைப்போல் பொதுப் பெரமுனவின் சார்பில் போட்டியிடும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிபெறப்போவதில்லை. அவரகள் அனைவரும் சகட்டுமேனிக்காகவே களமிறக்கப்பட்டுள்ளனர். காரணங்கள் பல இருக்கின்றன. இந்த வேட்பாளர்கள் பற்றி அந்த அந்த பிரதேசத்திலுள்ள எவருக்கும் எதுவும் தெரியாது. அவரகளுக்கு எந்தவித சமூக வரலாறும் இல்லை. முஸ்லிம் சமூகத்தில் இவரகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. சமூக சேவை செய்தாவது இவரகள் மக்கள் மத்தியில் பெயர் எடுக்கவில்லை. பொதுப் பெரமுன சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும் களம் இறக்கப்பட்டார்கள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்களே இவரகள். பொதுப் பெரமுன போன்ற பிரபல்யம் வாய்ந்த அரசியல் கட்சிகள்மூலம் தேர்தலில் களம் இறக்கப்படவேண்டியவரகளுக்கு என்று விசேட தகுதிகள் இருக்கின்றன. இவரகளுக்கு என்ன தகுதிகள் இருக்கின்றன. மக்கள் தலைவரகள்; அரசியல் தலைவரகள் என்பவரகள் எல்லாம் வரலாற்றில் இடம் பெற வேண்டியவரகள். இவரகளுக்கு என்ன தகுதி இருக்கினறது. உங்களைப் போன்றவரகள் ஊடகங்களை உரசி முரணான செய்திகளை வெளியிடாமல் இருப்பது சாலவும் நன்று. இலங்கை முஸ்லிம்களுக்கு பொதுப் பெரமுனவின் தலைமைகளிடம் இருந்து எவ்வாறு உதவிகள் பெறுவது என்பது அவரகளுக்கு மிக நன்றாகவே தெரியும். உங்களுக்கு இயலுமாக இருந்தால் அவரகளுக்கு இயலாதா?

rajpaksa will tall ,any plot will continue after election , wait,
following party donot cast vote

podjana parmuna
unp
slfp
related with pojana paramuna party

Post a comment