Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் இல்லை, நவ்பர் மௌலவிதான் - தாக்குதல் பற்றி 10 மாதங்களுக்கு முன் தெரியும் - தேசிய புலனாய்வு இயக்குநர் நிலாந்த


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபர் என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய ஜஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை என நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கட்டாரில் 19 வருடங்களாக வசித்த,சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே தாக்குதலின் சூத்திரதாரி என அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது குறித்து பத்துமாதங்களுக்கு முன்னரே புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.