Header Ads



பொய் குற்றச்சாட்டு சுயத்தியவரிடம் 1000 கோடி நஷ்டஈடு கோரும் சுமந்திரன்


கனடாவில் சேகரிக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை  இலங்கைத் தமிழரசுக் கட்சியும், கட்சியின் கனடாக் கிளையும் முற்றாக  நிராகரித்திருக்கின்றன. குற்றச்சாட்டை வைத்த நபர் கட்சியின்  பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு அவரது உறுப்புரிமையும் இடை நிறுத்தப்பட்டது.   

ஆனால் அவர் இவற்றிற்குப் பிறகும் அதே பொய்க்குற்றச்  சாட்டுக்களை மீளத் தொடுத்ததால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு  முன்னேற்பாடாக 1,000 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரியிருக்கிறேன். பதில்  கொடுக்கும் காலக்கெடு முடிந்த பின் வழக்குத் தாக்கல் செய்வேன் என  முன்னாள் எம்.பி சுமந்திரன்தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கிளைகளால் திரட்டப்படும் நிதி எந்த அரசியல் வாதியிடமும் கொடுக்கப்படுவதில்லை. நேரடியாக குறித்த பிரதேச மக்கள் அமைப்புக்களிடமே கொடுக்கப்படுவதுண்டு.  

சம்பூர் நிலத்தை நாம் வழக்காடி மீட்ட பின், சம்பூர் மக்களைக் குடியேற்றவென வெளிநாட்டில் நிதி திரட்டி 42 வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் முக்கிய பிரதேசங்களான கொக்கிளாய்,-கொக்குத் தொடுவாயிலும் நாம் வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுத்து அங்கிருந்து 1981, 1984 ஆண்டுகளில் விரட்டப்பட்ட தமிழ்க் குடும்பங்களை மீளக் குடியமர்த்தினோம். இவற்றை யாரும் போய்ப் பார்வையிடலாம். 

No comments

Powered by Blogger.