Header Ads



இம்முறை தேர்தலில் 10 ஆசனங்களை SLMC எடுத்தாக வேண்டும் - ஹக்கீம்

(ஆர்.யசி)

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆதிக்கத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவும் அமைந்துள்ளது. இம்முறையும் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்கிதியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரவூப் ஹகீம் தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக தற்காலிகமாக ஏற்படுத்திக்கொடுத்த வடக்கு கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும் தேர்தல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலமாக வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டதன் விளைவாக முஸ்லிம்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. முழுமையாக கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதன் வலி இன்றும் உள்ளது. அவ்வாறான சூழலில் தான் நாம் அரசியலுக்கு வரவேண்டிய நிலைமையும் உருவாகியது. 

அப்போது ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நேரத்தில் இலங்கை இந்திய உடன்படிக்கையை நீக்கி மீண்டும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை தக்கவைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய நாம் ரணசிங்க பிரேமதாசவை ஆதரித்தோம். அதன் மூலமாக அவர் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் நாம் செய்த உதவியை மறக்கவில்லை. அப்போதும் அவருக்கு பல அழுத்தங்கள், அவப்பெயர் ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் எமது தலைவர் ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் போலவே அன்றும் ஏற்பட்டது. ஆனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரச பலத்தை கையில் எடுக்கும் முயற்சியில் வெற்றிபெற்றது. ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனமான செயற்பாடுகளையும் அதன் மூலமாக ஏற்பட்ட பிளவுகளையும் நாம் சுட்டிக்காட்டியாக  சஜிதை கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டணியாக செல்ல வேண்டும் என கூறினோம். அதனை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொள்ளாத போதிலும் எமது நோக்கம் வெற்றியளித்துள்ளது. நாம் சஜித் பிரேமதாசவின் தலைமையில் பலமான கூட்டணியாக பயணித்து வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியாக வேண்டும், பொதுத் தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றால் இம்முறை பொதுத் தேர்தலில் பத்திற்கு குறையாத ஆசனங்களை நாம் எடுத்தாக வேண்டும். 

கடந்த முறை கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை நாம் கைப்பற்றினோம். அதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் பேசி ஒரு தீர்மானத்தை எட்டினோம். இம்முறையும் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். 

இப்போதே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எனவே கிழக்கில் முஸ்லிம் ஆட்சியை தக்கவைக்கும் வியூகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது  மட்டுமல்லாது மாகாண ஆதிக்கத்தையும் நாமே பெறுவதற்கான வியூகத்தையே அமைத்துள்ளோம். முஸ்லிம் சமூகம் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் எமக்கு பின்னால் இருந்து கூட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை மதிக்கும் நிலைப்பாட்டில் இல்லை. ஒரு சம்பவம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் மிகமோசமாக மாற்றியுள்ளது. எனவே நாம் பாதுகாப்பாக எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

9 comments:

  1. POIYAN, EMAATRUKAARAN,
    IVANAI NAMBAATHEERKAL.

    ReplyDelete
  2. 'முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!'
    (அல்குர்ஆன் : 3:200)

    ReplyDelete
  3. If so you can have a good deal at the cost of the Muslim community. Please don't have any day dream because the muslim community has already decided to send you and your colleagues on compulsory retirement.

    ReplyDelete
  4. Iwalau nasal ennatha than senjiga. Inni ennatha seyya poronga. Sathiyama ungalil irunda nambikkaiya Allah en manadirlirundu eduthuttan. Allah mattum thaan sri lankan Muslims pathugakka.neegal seiyidu irukkalaam. Aanalum muslimgal engalukkaga iwargal waadaduwaargal endrum nambikkai war in alwil ondum seyyawillai endurru thaan enakku feel aguthu.

    ReplyDelete
  5. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் கிட்டத்தட்ட
    300,000 வாக்குகளை அளித்ததாக எஸ்.எல்.பி.பி மற்றும் இலங்கை மக்கள் சுதந்திர கட்சி கூட்டணி
    முக்கிய அரசியல்வாதிகள் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளனர். காமன்பிலா ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். 2015 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையான முஸ்லிம்களும் எஸ்.எல்.பி.பி.க்கு வாக்களித்ததை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். 2020 ஆகஸ்ட் மாதம் (அடுத்த மாதம்) நடைபெறும் பொதுத் தேர்தலில் எஸ்.எல்.பி.பி / பொட்டுவா / இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு குறைந்தது 650,00 வாக்குகளை முஸ்லிம் வாக்கு வங்கி நம்புகிறது, இன்ஷா அல்லாஹ். ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்த "ட்ரெண்ட்" பற்றி கவலைப்படுகிறார்கள், ஆகஸ்ட் 5, 2020 அன்று "பொட்டுவா" க்கு வழங்கப்படும் இந்த வாக்குகளை "நிறுத்த" முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களுடன் 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தை கூட்டாளர்களாக உருவாக்க. மஹிந்தா, கோட்டபயா மற்றும் பசில் ஆகியோரால் அடுத்த 2/3 பெரும்பான்மை புதிய அரசாங்கம் உருவாக்கும் பணியில் முஸ்லிம்கள் பெரிய படத்தைப் பார்த்து "பங்குதாரர்களாக" மாற வேண்டும். மர்ஜன் ஃபலீல் ஹஜியார் மற்றும் வழக்கறிஞர் அலி சப்ரி மற்றும் எஸ்.எல்.பி.பி முஸ்லிம் அலைன்ஸ் ஆகியோரும் இதை ஆதரிக்கின்றனர். முஸ்லீம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அவர்கள் இந்த முறை எங்கள் முஸ்லிம் வாக்குகலை
    சஜித் பிரேமதாசாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள். புதிய அரசாங்கம் உருவாக்குவதற்கான ஒரே வழி, முஸ்லிம்கள் "பங்குதாரர்களாக" மாற வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்கள் எங்கள் வாக்குகளை SLPP / POTTUWA ALLIANCE, விடம் அளிப்பதன் மூலம் ரவூப் ஹக்கீம் அவரது குரலை மூடுவதாகும். கோட்டபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் தங்கள் அவர்களின் குழுவுக்கு
    யஹபலானா அரசாங்கத்தில் 21 முஸ்லிம் எம்.பி.கள் செய்த அதே அரசியல் ஊழலை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்று வாக்குறுதியளிக்க வேண்டும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், "முஸ்லீம் குரல்" இந்த எஸ்.எல்.பி.பி முஸ்லீம் எம்.பி.க்களை உன்னிப்பாக கவனிக்கும். மேலும் அவர்கள் ஊழலில் சிக்கி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கும்போது அவர்களை கண்டிக்க தயங்க மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  6. பல ஆண்டுகளாக நீங்கள் இதைச் செய்ய ரணிலுக்கு உதவினீர்கள். உங்கள் சொந்த இன்பம் மற்றும் நன்மைகளுக்காக நீங்கள் முஸ்லீம் வாக்கு வங்கியை ஏமாற்றி, தாழ்மையான முஸ்லீம்களை ஏமாற்றினீர்கள்.
    இதைத்தான் "ஜூன் 14, 2014 முதல் UNP மற்றும் "யஹபாலனா" அரசாங்கத்தை ஆதரித்த 21 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் அமைச்சர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் ஊழல் நிறைந்த சில உலமாக்கள் பற்றி வெளியிடப்பட்ட 2500 அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துகள் மற்றும் மறுப்புகள், யஹபலானா அரசாங்கத்தில் 21 முஸ்லிம் எம்.பி.கள் செய்த மோசடிகள் பற்றி முஸ்லிம் குரல் கூறி வருகிறது.
    உங்கள் அனைவரையும் பற்றி முஸ்லீம் குரல் எழுதி வருவதை மறுக்கவோ அல்லது சவால் செய்யவோ முடியுமா? எங்கள் எழுத்துக்களை நீங்கள் சவால் செய்தால், "முஸ்லீம் குரல்" உங்களுடன் பகிரங்கமாக விவாதிக்க தயாராக உள்ளது, இன்ஷா அல்லாஹ். ஆகையால், ஐக்கிய தேசியக் கட்சி, எஸ்.எல்.எம்.சி (SLMC), ஏ.சி.எம்.சி (ACMC), சஜித் ஆகியோருக்கு வாக்களித்த முஸ்லிம்களை தயவுசெய்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி பொட்டுவாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வது நல்லது. நியாயமான முஸ்லீம் வாக்காளர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்
    இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  7. முஸ்லிம்களுடைய வெற்றி முஸ்லிம்களின் தமிழ் நண்பர்கள் கிழக்கில் வெற்றி பெறுவதிலேயே அமைந்துள்ளது. அதனால்தான் சென்றமுறை கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தும் முஸ்லிம் முதல் அமைச்சர் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்த தேர்தலில் முஸ்லிம்கள் பொறுப்புடன் பேசாவிட்டால் தமிழ் நண்பர்களை இழந்து வருந்த நேரும்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. You will be lucky, if you get one !!!!!
    Ha Ha Ha

    ReplyDelete

Powered by Blogger.