Header Ads



இலங்கைக்கு வரும் போரா தலைவருக்கு VIP பாதுகாப்பு - அவர் வருவது பாப்பாண்டவர் வருகைக்கு சமமானது

எதிர்காலத்தில் இலங்கைக்கு வரும் போரா முஸ்லிம் தலைவர் உள்ளிட்ட குழுவினர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் சிறப்பு உயர் பாதுகாப்பு வழங்கப்படும் எனப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் உள்ள போராக்களின் தலைவர் இவர் தான். அவர் வருவது பாப்பாண்டவர் இலங்கைக்கு வருகை தந்ததற்குச் சமமானது இதனால் விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தேசிய புலனாய்வுத் தலைவர் தலைமையகத்தின் கீழ் இந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும்.

இந்த குழு பண்டாரவளையிலுள்ள அவர்களின் சிறப்பு லொஜ்ஜில் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த குழுவினர் எவரும் நாடு முழுவதும் சுற்ற முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

5 comments:

  1. இவ்வாறு வர இருக்கும் போராத் தலைவர் மற்றும் அவரது குழுவிலுள்ள எவரும் இலங்கையில் இருக்கும்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்களது உடலும் எரிக்கப்படுமா?

    ReplyDelete
  2. மிகச்சிறிய ஒரு குழுவின் தலைவரான ஒருவருக்கு ஒரு நாட்டின் தலைவரின் அந்தஸ்த்தைக் கொடுப்பது என்ன? பணம்,பணம், ஆட்சியில் உள்ள ' பெரியவர்களுக்கு' கையைப் பொத்தி சரியாக வைத்தால் குப்பையில் உள்ளவனுக்கு அரசனாகலாம் என்ற நியதிக்கு இலங்கை மிகச் சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  3. அவை இந்தியாவுக்கு அனுப்பி இறந்தவருக்கான மதக் கிரியைகள் மேற்கொள்ளப்படும்.

    ReplyDelete
  4. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
    (அல்குர்ஆன் : 49:12)

    ReplyDelete
  5. கோரோணாவினால் மரணம் 1% மாத்திரம்தான்.  ஆனால், 100% மரணம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எவருக்கும்  சம்பவிக்கலாம்.  இதை முஸ்லிம்கள் நன்கறிந்துள்ளனர்.  ஆனால், தாம் இறந்தபின் எரிக்கப்படுவதை எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டார்கள்.  எனவே, வெளிநாட்டிலிருந்து இங்கு வர விரும்பும் முஸ்லிம்கள் தமது பாதுகாப்பை முன்கூட்டியே கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.  இங்குள்ள அனைத்து முஸ்லிம்  சகோதரர்களுக்காகவும் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.  ஓர் உடம்புக்கு ஒப்பான, உலகின் 180 கோடி முஸ்லிம் சகோதரத்துவ சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினர் மாத்திரமே இலங்கையில் வாழ்கின்றனர்.  இதை இலங்கை ஆளும் வர்க்கமும் உணர்ந்து கொள்ள வேண்டும். 
    போராத் தலைவரும் அவரது குழுவினரும் இலங்கை வர முன் தமது பாதுகாப்பு பற்றியும் இங்குள்ள அவர்களது சகோதரர்களான எமது பாதுகாப்பு பற்றியும் கலந்தாலோசித்து ஓர் முடிவுக்கு வருவதே மேல்.

    ReplyDelete

Powered by Blogger.