Header Ads



UNP அழிந்து விட்டது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் தேவையுள்ளது

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் தேவை உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவ்வாறான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தேர்தல் வியாபாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்படுத்திய சிக்கல் காரணமான கட்சி அழிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலைமையினால் பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மனஉலைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவ்வாறான ஆதரவாளர்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. ஜப்பான் அரசாங்கத்தின் பிரதான நிறுவனமான ஜய்கா நிறுவனம் இலங்கைக்கு உதவிகள், கடன்கள் கொடுப்பதை நிறுத்தியுள்ளது. நிதியை இலங்கை அரசாங்கம் கையாளும் விதத்தில் அவர்களுக்கு நம்பிக்ைக இல்லை எனவும் எடுக்கும் கடன்களைத் திருப்பிச் செலுத்த அரசாங்கத்துக்கு எந்தவிதமான திட்டங்களும் இல்லை எனவும் இலங்கைக்கு உதவி செய்வதை அந்த நிறுவனம் நிறுத்தியுள்ளது. எனவே அரசாங்கம் சார்ந்தவர்கள் உலகில் அங்குமிங்கும் முடக்கி வைத்துள்ள கோடான கோடி பணத்தை வௌியில் எடுத்து திறைசேரிக்கு ஒப்படைத்தால் அரசாங்கத்தை இன்னும் நூறு இருநூறு வருடங்கள் கொண்டு செல்லலாம். இல்லாவிட்டால் மன் தகப்பர குண்டி குப்புரதான்.

    ReplyDelete

Powered by Blogger.