Header Ads



தேர்தலின் பின்னர் ரணில் தலைமையில் UNP அரசாங்கத்துடன் இணையும்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துடன் கூட்டணியாக இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை அமைக்க எவரது ஆதரவும் தேவையில்லை என அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எவரது ஆதரவும் இன்றி ஆட்சியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்தி கொண்டு செயற்பட்டு வருவதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முயற்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் மேற்கொண்டு வருவதாகவும் அந்த கட்சியின் கூறி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.