Header Ads



மொட்டுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், UNP க்கு வாக்களித்து விடாதீர்கள் - ஹிருணிகா

(செ.தேன்மொழி)

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதன் நோக்கிலே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தங்களுக்கு வழங்குமாறு குறிப்பிடுகிறது. பெரும்பான்மை பலம் கிடைத்தால் நிச்சயம் எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

செயற்படும் வீரரின் அரசாங்கம் செயற்திரன் அற்ற அரசாங்கமாக மாறியுள்ளது. முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதுடன் , அடுத்து வரும் இரு வருடங்களில் இலங்கை கிறிஸ் நாட்டின் நிலைமைக்கு செல்லவேண்டிய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அரசாங்கம் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. 

நாட்டுக்கு நன்மைத்தரும் காரியங்களை செய்வதற்காக எந்தவொரு அரசாங்கத்திற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நன்மைத்தரும் செயற்பாடுகளுக்கு எதிர் கட்சியினராக இருந்தாலும் தங்களது ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்பார்கள்.

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்வதற்காக நியமித்திருந்த குழுவினரின் அறிக்கை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. ஒப்பந்தம் இரு கட்டங்களாக கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், நிதி பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க தூதரகம் அவ்வாறு எந்த அரசுக்கும் நிதி பெற்றுக் கொடுக்கவில்லை என்று அதனை நிராகரித்துள்ளது.

 இந்நிலையில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நோக்கிலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரிக்கையை முன்வைத்துள்ளது என்றே நாங்கள் எண்ணுக்கின்றோம். அதனால் மக்கள் இது தொடர்பில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். செயற்படும் வீரன் கடுந்தொனியில் யாரையாவது சாடுவதை மாத்திரமே விரும்பி வரும் தரப்பினருக்கு நாங்கள் இதனை கூறவில்லை. நடுநிலையில் இருந்து சிந்தித்து செயலாற்றும் தரப்பினருக்கே இதனை தெரிவிக்க விரும்புகின்றோம். ஜனாதிபதியின் புதிய புதிய அரங்கேற்றங்களை பார்த்து குதுகளித்துவரும் நபர்கள். அதற்கு பின்னர் என்ன நடக்கின்றது என்பதை சிந்திப்பதில்லை.

அதனால் மொட்டுக்கு வாக்களிக்கும் போது நன்கு சிந்தித்து வாக்களியுங்கள். மொட்டுக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களிப்பதாக எண்ணுபவர்கள் தயவு செய்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். ஏன் என்றால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு ஆதரவை பெற்றுக் கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதாக அவர்களே தெரிவித்துள்ளனர். 

மொட்டு கட்சியினரும் அதற்கேற்றாட்போல் தங்களுடன் இணைந்து செயற்படுமாறு ஐ.தே.க.வுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு கட்சிகளுக்கு வாக்களிக்க விருப்பம் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாக்களிப்பதில் இணக்கப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் தங்களது வாக்குகளை செல்லுப்படியாகாத வகையில் கிறிக்கி விட்டாவது வாருங்கள். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மாத்திரம் பெற்றுக் கொடுக்காதீர்கள் என்றார்.

No comments

Powered by Blogger.