Header Ads



UNP கைவிரல்கள் அளவுக்கு கூட ஆசனங்களை கைப்பற்ற முடியாது, எமக்கு பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே போட்டி

இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே போட்டி இருப்பதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்த போட்டியும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி கைவிரல்களின் எண்ணிக்கை அளவுக்கு கூட ஆசனங்களை கைப்பற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நூற்றுக்கு 5 வீத வாக்குகளை கூட ரணில் விக்ரமசிங்கவினால், இம்முறை தேர்தலில் பெற முடியாது. எமக்கு ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 15 பேருடன் எந்த போட்டியும் கிடையாது.

ஐக்கிய தேசியக்கட்சியினர் அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மங்கள சமரவீர சுயாதீனமாக இருப்பது எம் அனைவருக்கும் நல்லது.

நாங்கள் சிறந்த தலைவருடன் தூய்மையான பயணத்தை மேற்கொள்வோம். அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோரியவர்கள், தற்போது சாதாரண பெரும்பான்மை பெற போவதாக கூறுகின்றனர். இந்த கதையின் மூலமே அரசாங்கத்தின் வீழ்ச்சியை அறிந்து கொள்ள முடியும்.

நாட்டின் சட்டம் சீர்குலைந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் கட்சியின் தவிசாளராக இருக்கின்றனர். எப்படி திருடர்களை பிடிக்க முடியும்.

200 நாட்களில் மக்கள் அரசாங்கத்தை வெறுத்துள்ளனர். சர்வாதிகாரம் நாட்டில் தற்போது அரசாளுகிறது.

இவற்றுக்கு தேர்தலில் பதிலளிக்க மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.