Header Ads



கொள்ளுப்பிட்டிய OIC உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(செ.தேன்மொழி)

கொள்ளுப்பிட்டியில் முன்னிலை சோசலிஷ கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக கடமையில் ஈடுப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும்  அத்திட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் , தொற்று நீக்கம் மற்றும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுதல் ஆகிய சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மினியாபொலிஸ் நகரில் வெள்ளையின அமெரிக்க பொலிஸார் ஒருவரால் கொள்ளப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோய்ட்டின் மரணத்திற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் முன்னிலை சோசலிஷ கட்சியினரால் கடந்த செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோட்டை நீதிவான் நீதி மன்றத்திற்கு அறிவித்து தடை உத்தரவை பெற்றுக் கொண்டிருந்ததுடன். அதனை கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 53 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

பொலிஸாரின் இந்த செயற்பாடு இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், தாங்கல் சட்டவிதிகளுக்கமையவே செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் தனிமைப்படுத்தி வைப்பதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய இவர்கள் அனைவரும் பொலிஸாரின் அத்திட்டிய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.