Header Ads



நிரந்தர இன ஐக்கியத்துக்கும், சகவாழ்வுக்கும் முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் - MS உவைஸ்

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள  பாராளமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் அரசாங்கத்தை  ஆதரித்து  வாக்களித்து, இந்த மாவட்டத்தில் இன ஐக்கியத்துக்கும் சகவாழ்வுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும்  என திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ். உவைஸ் தெரிவித்தார்.

பொது ஜன பெரமுன கட்சியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக இன்று (11)  கிண்ணியா காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் மீண்டும்  ஏமாறுவதை விடுத்து, இன்னும் ஐந்து வருட ஆட்சியில் பங்காளிகளாக மாற வேண்டும்.

அரசாங்கத்தின் வெற்றிக்காக இன்று கிண்ணியாவில் மட்டும் என்னோடு 200 க்கும் மேற்பட்ட உலமாக்கள் இணைந்துள்ளார்கள். இவர்களின் வரவு சகோதர சமய தலைவர்களை நம்பிக்கை பெறச் செய்திருக்கிறது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதற்கு  கிழக்கு மாகாணத்திலே இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் நான் தான். இதன் மூலம் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் இக்கட்சியினால் கெளரவிக்கப்பட்டிருப்பது மாத்திரமன்றி, இக்கட்சியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு ஒருவரை அனுப்புவதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். இதனை இந்த மாவட்ட முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.