Header Ads



மகிந்த அரசாங்கமே முதன்முதலாக MCC குறித்த வேண்டுகோளை விடுத்தது - அமெரிக்க தூதரக அதிகாரி


இலங்கை, அமெரிக்காவிடமிருந்து வேண்டுகோள் விடுத்த 480 மில்லியன் டொலர் நிதி தொடர்ந்தும் அரசியல் மயப்படுத்தப்படுவதும், அது தொடர்பில் தவறான தகவல்கள் வெளியாவதும் ஏமாற்றமளிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பொதுவிவகார அதிகாரி டேவிட் மக்குயர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதன் முதலில் 2005 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே எம்.சி.சி உதவிதொகைக்கான வேண்டுகோளை விடுத்தது என அவர் டெய்லிமிரரிற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சர்வதேச அளவில் 30 நாடுகளுடன் 37 தடவை இதேமாதிரியான விடயங்களை உள்ளடக்கிய எம்.சி.சி உடன்படிக்கையி;ல் கைச்சாத்திட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நன்கொடைக்கு தகுதிபெற்ற அனைத்து நாடுகளும் அதனை கோரியுள்ளன ஆசிய நாடுகளும் அதனை கோரியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முகவர் அமைப்புகளில் வெளிப்படை தன்மை விடயத்தில் எம்.சி.சி முதலாவதாக காணப்படுகின்றது,சர்வதேச அளவிலும் அவ்வாறானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 வலிமையான இறைமையுள்ள அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான ஆதரவே அமெரிக்க இலங்கை உறவுகளிற்கு அடிப்படை என தெரிவித்துள்ள அவர் இந்த நோக்கத்தை மனதில் வைத்து அமெரிக்கா கடந்த 70 வருடங்களில் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் நன்கொடையை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் வழங்கும் இந்த நன்கொடையை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது இலங்கை அரசாங்கத்தின் கரங்களில் உள்ளது எனவும் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

உத்தேச திட்டத்தின் அடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு அமெரிக்கா எந்த நிதியையும் வழங்கவில்லை, இலங்கை அரசாங்கம் எதனையும் செலவிடவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.