Header Ads



Dr ஷாபி எங்கே..? கருத்தடை மாத்திரைக்கு என்ன நடந்தது? பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?

வரலாற்றில் என்றுமில்லாத அளவில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மிக மோசமான முறையில் இனவாதம் மற்றும் மதவாதம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என சகல அடிப்படைவாதிகளும் ராஜபக்ச அணியிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்த கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“வைத்தியர் ஷாபி என்ற ஒருவரை உருவப்படுத்தினர். தற்போது வைத்தியர் ஷாபி எங்கு இருக்கின்றார் என்று கேட்க விரும்புகிறேன்.

கருத்தடை மாத்திரை என்று கூறி நீண்ட கதையை ஒன்றை முன்னெடுத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது அந்த கருத்தடை மாத்திரைக்கு என்ன நடந்தது?. தற்போது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றனவா?.

இவை பற்றி தற்போது எவரும் பேசுவதில்லை. வைத்தியர் ஷாபி இல்லை. கருத்தடை மாத்திரைகள் இல்லை.

இவை அனைத்தையும் பயன்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

மிகவும் துரதிஷ்டவசமான வகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமது நாட்டில் மிக மோசமான முறையில் இனவாதம் மற்றும் மதவாதம் கையாளப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.