Header Ads



புதிய சமூக அமைப்பை, உருவாக்கும் பணியில் மங்கள

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் சமூக அமைப்பு ஒன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீரவுக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இம்முறை பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை மாற்றிக்கொண்ட அவர், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டாம் எனவும் மங்கள மாத்தறை மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர அந்த கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்ததுடன் அவருக்கு விருப்பு வாக்கு இலக்கமாக 8 வழங்கப்பட்டிருந்தது. மங்கள சமரவீர இதே இலக்கத்தில் நான்கு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வந்த அவர், சில பௌத்த பிக்குகள் பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் காவிதாரிகள் என குற்றம் சுமத்தியிருந்தார். இதனால், அரசியலுடன் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குகள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

1 comment:

  1. இன மத வரையறைகளுக்கு அப்பால் இவர் துறைபோன அறிஞர்கள், சிந்தனையாளர்களுடைய ஆலோசனைகளுடன் தான் இந்த சமூகம் சார்ந்த சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்வைக்க முடியும். வாழ்க்ைகயின் முழுக்கால நேரத்தையும் அரசியல் அல்லது கட்சிகளுக்காகப் பாடுபட்டவர், அந்த வரையறைகளுக்கு அப்பால் உடனடியாய செயற்படுவார் என்பதை ஒருபோதும் நம்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.