Header Ads



சஜித்தின் இடத்தை நிரப்ப ரவியும், தயாவும் சண்டை


ஐக்கிய மக்கள் சக்தி கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாஸ விலகியதன் காரணமாக இதன் இடை வெளி நிரப்புவதற்காகத் துணைத் தலைவர் ரவி கருணநாயக்க மற்றும் மூத்த துணைத் தலைவர் தயா கமகே ஆகியோர் சண்டையில் ஈடுபட்டதாக்கச் சிங்கள ஊடகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியை ரவி கருணாக்கக் கடுமையாக எதிர்பார்த்திருந்ததாகவும், தயா கமகேக்கு துணைத் தலைவர் பதவி வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு அதிக விரும்பம் இருந்ததாகவும் ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து போட்டியிடவிருந்த தயா கமகே, கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேவையான பின்னணியைக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஹோமாகம தொகுதியில் தயா கமகே ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்க தன்னுடைய போராட்டத்தைக் கைவிடவில்லை என்றும், அவர் கட்சியின் துணைத் தலைவரானால் கட்சியைப் பலப்படுத்தப் பல திட்டங்ளில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகச் சிங்கள ஊடகம் தகவலைத் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.