Header Ads



முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பாராளுமன்றத் தேர்தல் சிறுபான்மையினருக்கு மிகவும் சவால் மிக்க ஒன்றாகும். சிறுபான்மையினரின் உதவியின்றி ஆட்சி அமைக்க முடியுமென்று கனவு காணும் ஆளுந் தரப்பினரின் குறுகிய சிந்தனையை முறியடிப்பதற்கு சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். சிறுபான்மையினர் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் 06ஆம் இலக்க வேட்பாளருமாகிய எம்.ஐ.எம்.மன்சூர் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தலின் போது கணிசமான அளவு சிறுபான்மையினர் வாக்குகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டார். ஆயினும், தமது வெற்றியை பெரும்பான்மையினரின் வெற்றியாகவும், சிறுபான்மையினர் அவரது வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை என்பது போலவும் கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போது பாராளுமன்றத் தேர்தலில் கூட சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சிலரை பகடைக்காய் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்கள். இவர்களினால் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஆனாலும், அவர்களினால் வெற்றி பெற முடியாது. பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் ஒருவர் வெற்றி பெறக் கூடாதென்பதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கு அக்கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய இவர்கள் ஏமாந்து போயுள்ளார்கள்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் சிறுபான்மையினருக்கு மிகவும் சவால் மிக்க ஒன்றாகும். சிறுபான்மையினரின் உதவியின்றி ஆட்சி அமைக்க முடியுமென்று கனவு காணும் ஆளுந் தரப்பினரின் குறுகிய சிந்தனையை முறியடிப்பதற்கு சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். சிறுபான்மையினர் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

ஆதலால், சிறுபான்மையினர் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதிகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். வெற்றி வாய்ப்பில்லாத கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை அளித்து சமூகத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடாது.
அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும். முஸ்லிம்களின் பெரும்பான்மையான மாவட்டத்தில் சிறிய சிறிய தவறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் மனதிற் கொண்டு வாக்குகளை பல கட்சிகளுக்கு அளித்து வாக்குகளை சிதறடிக்கக் கூடாது. வாக்குகள் சிதறும் போது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். 

முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனங்களுக்கு மத்தியில் பல சமூகப் பணிகளைச் செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அநீயாயத்திற்கும் எதிராக தயக்கமின்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைமை குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. எமது பிரச்சினைகள் பற்றி சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் காங்கிரஸ்தான் மேற்கொண்டது என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அங்கிகாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் தங்களின் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸின் மூலமாகவே நிரூபிக்க முடியும். 

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் கூட்டுச் சேர்ந்துள்ளன. முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதனை நாம் உணர்ந்துள்ளோம். ஆதலால், முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

4 comments:

  1. சிந்திக்க வேண்டிய விடயம்.
    பெரமுனவுக்கு பல லட்சம் முஸ்லிம்கள் வாக்களித்தும் ஒரு பிரதிநிதியையாவது பெற முடியாமல் போகும் நிலை ஏற்பட்டால் அவர்கள் இதே கதையை தான் மீண்டும் சொல்வார்கள்.
    முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை, சிங்கள பெரும்பான்மையால்தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று.
    எனவே நமது வாக்குகளை வெற்றி பெற வாய்ப்பில்லாத, வாக்குகளை பிரிக்கும் நோக்கில் நிறுத்தப்பட்ட உதிரி வேட்ப்பாளர்களுக்கு அளிப்பது முட்டாள் தனமானது.
    அதே நேரம் பெரமுன சார்பாக முஸ்லிம் பிரதிநிதியை பெற முடியுமான சந்தர்ப்பம் உள்ள போது அதை தவற விடுவதும் முட்டாள் தனமானது.
    கட்சி அரசியல் சாராமல் ஒரு சமூக கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைப்பது ஆபத்தானதே.

    ReplyDelete
  2. HELLOOO Dont go a round and blaaa blaaa come to point
    to whom we have to vote ?
    tell us straightly

    ReplyDelete
  3. கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்த முறை மக்களுக்கு பிரயோசனமான பிரதிநிதிகளை தெரிவு செய்வோம்

    ReplyDelete
  4. We do not vote Mr. Mansoor. He is dirty politician

    ReplyDelete

Powered by Blogger.